இந்திய அரசின் 100 சான்றிதழ்களை பெற்ற குவைத் தமிழர் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

இந்திய அரசின் 100 சான்றிதழ்களை பெற்ற குவைத் தமிழர்

செப்டம்பர் 18,2022 

Comments

இந்திய அரசு நடத்திக் கொண்டிருக்கும் இணைய வினாடி வினா போட்டிகளில் பங்கேற்று இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சான்றிதழ்களை பெற்றுள்ளார் குவைத் வாழ் தமிழரான பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ.

இந்திய அரசு இணையத்தில் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் சார்பாக வினாடி வினாக்கள் பதிவேற்றப்படுகின்றன. இந்த வினாடி வினா, அரசின் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள், நல்ல நிர்வாகத்தைப் பற்றிய குடிமக்களின் புரிதலை அதிகரிப்பது மற்றும் நல்லாட்சி குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய கூட்டுத் தேடலை வலுப்படுத்துவதையும், பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகள் மற்றும் பலன்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பங்கேற்பாளர்களுக்கு உணர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. வினாடி வினா தொடரில் பெருமளவில் பங்கேற்பது அடிமட்ட அளவில் அரசாங்க ஈடுபாட்டை ஆழமாக்கும். குறிப்பிட்ட நேரங்களில் வினாக்களுக்கு சரியான விடைகளை அளிக்க வேண்டும். வெற்றியாளர்களுக்கு தரக்குறியீடுகளுடன் பங்கேற்பாளர் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சில போட்டிகளில் பணப் பரிசுகளும் வெகுமதிகளாக தரப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

மக்கள் அனைவரும் பங்கேற்று தங்கள் அறிவை சோதிக்க அழைப்பு விடுத்துள்ளது இந்திய அரசு. இந்த அழைப்பை ஏற்ற பலரில் குவைத் வாழ் தமிழரான பரங்கிப்பேட்டை கலீல் பாகவீயும் ஒருவர். இவர் ஆசிரியர், மொழிப்பெயர்ப்பாளர், ஊடகவியலாளர் என பன்முகத்தன்மை கொண்டவர், குவைத்திலும், தமிழகத்திலும் சமூக, சமய, கல்வி, மொழி, கலை, இலக்கிய, ஊடக, அரசியல் அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டு வருபவர். உலகளவில் பல போட்டிகளில் பங்கேற்று பல பரிசுகளையும், பதக்கங்களையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

இந்திய அரசு நடத்தும் இந்த போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று இதுவரை 100 சான்றிதழ்களை பெற்றுள்ள கலீல் பாகவீ, 'பரிசுகளை எதிர்பார்த்து எதிலும் நான் பங்கேற்பதில்லை. பார்வையாளராக இருப்பதை விட பங்கேற்பாளராக இருப்பது தான் எனக்கு பிடிக்கும். வெற்றி தோல்வி என்பது நிலையானது அல்ல. போட்டிகளில் பங்கேற்றவன் என்ற பெயரே நமக்கு திருப்தியை தர போதுமானது. நிறைய தகவல்களை இதனால் தெரிந்து கொள்ள முடிகின்றது. மக்கள் அனைவரும் இது போன்ற போட்டிகளில் வயது வித்தியாசமின்றி பங்கேற்க வேண்டும். ' என்றார்.

- நமது செய்தியாளர் கலீல் பாகவீ

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us