குவைத்தில் அரபு வசனங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் காணொளி வெளியீடு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

குவைத்தில் அரபு வசனங்களுடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் காணொளி வெளியீடு

செப்டம்பர் 19,2022 

Comments

தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் சென்னைப் பல்கலைக்கழகம் சார்பில் அரபுத்துறைப் பேராசிரியர் அ. ஜாகிர் ஹுசைன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் காணொளியை உருவாக்கியுள்ளார். தமிழ், அரபு, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் வசனங்களுடன் (சப் -டைட்டில்) உருவாக்கப்பட்டுள்ள இந்தக் காணொளிக்கு தாஜ்நூர் இசையமைத்துள்ளார்.

குவைத் தமிழ்நாடு பொறியாளர்கள் குழுமம் சார்பில் 16.09.2022 அன்று குவைத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் குழுமத்தின் முன்னாள் தலைவர் லக்ஷ்மி நாராயணன் காணொளியை வெளியிட்டார். சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் சிறப்புப் பேச்சாளராக இவ்விழாவில் கலந்துகொண்டார். த.பொ.கு. தலைவர் கிருஷ்ண ஜகன், முன்னாள் தலைவர்கள், முத்து குமார், ராமராஜ், இணைச் செயலாளர் சுப்ரமணியன், நிர்வாகிகள் மற்றும் குவைத்வாழ் தமிழர்கள் அதிக அளவில் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளை விளக்கும் முதல் காணொளி இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அரபு நாடுகளில் தமிழ், அரபு, ஆங்கில சப் டைட்டில் உடன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக் காணொளி வெளியிடப்படும் முதல் நாடு குவைத் என்பது கூடுதல் சிறப்பு . இனிவரும் காலங்களில் அரபு நாடுகளில் நடைபெறும் தமிழ் நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் பொருளை அரேபியர் உட்பட அனைவரும் புரிந்துகொள்வதற்காக இந்தக் காணொளி திரையிடப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தார்கள்.

- நமது செய்தியாளர் கலீல் பாகவீ

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்

அருள்மிகு இலட்சுமி திருக்கோவில், ஆஷ்லேண்ட், மசாசுசெட்ஸ்...

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்

திருகோணமலை வீரகத்திப் பிள்ளையார் கோவில்...

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022

சியாட்டில் தமிழ் சங்க நிர்வாகிகள்- 2022...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us