சிங்கப்பூரில் நவராத்திரி விழா கோலாகலம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூரில் நவராத்திரி விழா கோலாகலம்

செப்டம்பர் 27,2022 

Comments

சிங்கப்பூர் பிரபல வைஷ்ணவ ஸ்தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் நவராத்திரி விழா செப்டம்பர் இருபத்தாறாம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. நவராத்திரி முதல் நாள் விழா ஆலய வித்துவான்களின் மங்கல இசையுடன் தெய்விக சூழலில் ஆரம்பமாகியது. வசந்த மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேஷ மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பின் பக்தப் பெருமக்கள் ஆலயத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கொலு மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகளும் அற்புதமாக அமைந்தன. ராதா நாராயணன் குழுவினரின் பக்திப் பாடல் இசை கம்பீரமாக நடைபெற்றது. ஸ்ரீலட்சுமி பரத நாட்டியப் பள்ளியைச் சேர்ந்த நாட்டியமணிகளின் பரதம் பார்வையாளர்களைச் சுண்டி இழுத்தது.

நிகழ்விற்குப் பின் வழங்கப்பட்ட பிரசாதம் செவிக்குணவிலாத போது வயிற்றுக்கும் இதமாக சுவைத்தது. ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளை மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us