குவைத்தில் ஒரு திருவையாறு..! ப்ரீத்தா ஷிவானி ராஜாவின் கர்நாடக இசை அரங்கேற்றம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

குவைத்தில் ஒரு திருவையாறு..! ப்ரீத்தா ஷிவானி ராஜாவின் கர்நாடக இசை அரங்கேற்றம்

செப்டம்பர் 28,2022 

Comments

  கொரோனா பாதிப்புக்குபின் சங்கீத தேவதைகளும் தங்கள் முககவசத்தை மெல்ல கழட்ட தொடங்கியுள்ள நிலையில், அல்குவைத்தை. திருவையாறு குவைத்தாக மாற்றும்படி , குவைத்தில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் ராஜா மற்றும் மகாலஷ்மியின் புதல்வி. பிரீத்தாஷிவானிராஜா ( 15 ) வாய்ப்பாட்டு அரங்கேற்றம் குவைத்தில் உள்ள ஸ்மார்ட் இந்தியன் ஸ்கூல் அரங்கத்தில் 23.09.2022 வெள்ளிக்கிழமை அன்று மிகசிறப்பாக அரங்கேறியது.

பிரீத்தாஷிவானி கடந்த 10 வருடங்களாக கர்நாடக சங்கீதத்தை குவைத்தில் ராஜேஷ் திருவல்லா எனும் குருவிடமும், இந்தியாவில் பாண்டிச்சேரி வேல்முருகன் என்னும் குருவிடமும் முறைப்படி கற்றுத் தேர்ந்து வருகிறார். தனது 10 வருட இசைப்பயிற்சியின் பலனாக இன்று அரங்கேற்றம் என்னும் முதல் படிக்கட்டில் ஏறினார்.

தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சௌமியா சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை புரிந்து அரங்கேற்றத்தில் கலந்து கொண்டார். மேலும் குவைத் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர்கள் நடராஜன் மற்றும் ஆனந்தி நடராஜன் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இவர்களுடன் பிரான்ஸ் தூதரகத்தை சேர்ந்த ஈயாபென்ஸ் மற்றும் குவைத் பல்கலைக் கழகத்தை சேர்ந்த அன்பால் அல் ஆவோதி ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

விழா பாரம்பரிய முறைப்படி சரஸ்வதிதேவிக்கு பூஜை மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. முதலில், பிரீத்தாஷிவானி தனது சிறுவயதில் இருந்து கற்ற நினைவலைகள் ஒரு குறும்படமாக திரையிடப்பட்டது. பின் கச்சேரி தொடங்கியது.

சங்கீத கலாநிதியின் முன் சற்றும் பயமில்லாமல் ராகமாலிகாவில் ' வாச்சிவளச்சி ' என வர்ணம் பாடி கச்சேரியை அமர்க்களமாக ஆரம்பித்தார். தொடர்ந்து 'சித்திவிநாயகம்' என ஷண்முகப்ரியா ராகத்தில். ரூபகதாளத்தில்அமைந்த. முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனையை அழகாக ராகம் பாடி, சுரம்பாடி, கச்சேரிக்கு வந்திருந்தோரின் கவனத்தை ஈர்த்து அரங்கம் அதிரும்படியான கைத்தட்டலை பெற்றார்.

தொடர்ந்து சங்கீத மும்மூர்த்திகளின் புகழ்பெற்ற ' சமாஜவரகமனா ' 'ஷோபில்லு சப்தஸ்வரா' போன்ற கீர்த்தனைகளை பாடி கர்நாடக சங்கீத ரசிகர்களை கவர்ந்ததார். அவர் தேர்ந்தெடுத்து பாடிய திருவருட்பா, திருப்புகழ், பாரதியாரின் ' தீராத விளையாட்டுப் பிள்ளை' சிவனய்யாவின் பாடல்கள் என அனைத்தும் தமிழ் ரசிகப் பெருமக்களின் செவிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நல்விருந்தாக அமைந்தது.

தொடர்ந்து கச்சேரியின் மாஸ்டர்பீஸ் ஆக ' உன்னையல்லால் வேறுகதி இல்லை ' என்ற கீர்த்தனையை பக்க வாத்தியக்காரர்களுடன் நிரவல், சுவரம் பாடி கேட்பவரை ஸ்தம்பிக்க செய்து கல்யாணி ராகத்தை அரங்கமெங்கும் வழிந்தோட செய்தார்.

அடுத்ததாக கடினமான சந்த நயத்துடன், தாளத்துடன், அமைந்த ' முத்தைத்தரு பத்தித்திருநகை ' என்ற திருப்புகழ் பாடலை தெளிவாகவும், கம்பீரமாகவும் பாடி அரங்கத்தையே நிமிர்ந்து அமர செய்தார். அதைத் தொடர்ந்து ' கிருஷ்ணாநீபேகனே' என்று பாடி குட்டி கிருஷ்ணனே, புல்லாங்குழலுடன் கச்சேரிக்கு வந்துவிட்டானோ என்று கேட்பவரை மெய்சிலிர்க்க வைத்தார். நிறைவாக தோனியின் அதிரடி ஆட்டம் போல் சுவாதித் திருநாளின் தில்லானாவை விறுவிறுப்பாக பாடத் தொடங்கி சரணம். இறுதியில் தோனியுடன் இணைந்த கோலிபோல அவளது சகோதரி டாக்டர். பூஜாவர்ஷினிராஜா பரதத்துடன் சிக்ஸர் அடித்தது அரங்கமே கைத்தட்டலில் வெகுநேரம் நிறைந்திருந்தது.

தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சௌமியா தனது பாராட்டு உரையில் பயம் சிறிதுமின்றி மேடையில் சக கலைஞர்களுடன் ஒன்றிணைந்து தாளம் தப்பாமல் பாடிய ' ப்ரீத்தாவின் திறமையை பெரிதும் பாராட்டினார் . மேலும் ப்ரீதாவின் குரல் கர்நாடக சங்கீதத்திற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினார். இனி வரும் காலங்களில் ப்ரீத்தா மென்மேலும் பல கர்நாடக இசைக்கச்சேரிகள் செய்து ஒரு சிறந்த கர்நாடக இசைபாடகியாக வரவேண்டும் என்றும் வாழ்த்தினார்.

சிறப்பு விருந்தினர்கள் நடராஜன் மற்றும் ஆனந்திநடராஜன் ஆகியோரும் ப்ரீதாவின் திறமைகளை பாராட்டி கர்நாடக இசையில் சிறந்து விளங்குவது போல் ப்ரீத்தா படிப்பிலும் சிறந்து விளங்குவதாக பாராட்டினார்கள். ப்ரீதாவின் திறமைகளை கண்டறிந்து அவளை சிறுவயது முதலே இசை கற்றுத்தேர அவளுக்கு ஊக்கமாக இருந்த பெற்றோர் ராஜா--மகாலட்சுமியை மிகவும்பாராட்டினார்கள்.

இறுதியில் ப்ரீதாவின் நன்றியுரை அனைவராலும் நெகிழப்பட்டது.தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் வந்திருந்த அனைவருக்கும் ஹோட்டல் சரவணபவன் இன் லைவ்கிச்சனில் அருமையான விருந்து வழங்கப்பட்டது. வந்திருந்த சுமார் 500 நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் , செவியும் , வயிறும் , மனமும் , நிறைந்து நிகழ்ச்சி அருமையாக இருந்ததாக கூறி ப்ரீத்தாவை வாழ்த்தி சென்றனர்.

இந்த  இசை கச்சேரி அரங்கேற்ற ப்ரீதாவின் தகப்பனார் குவைத்தில் முக்கிய நபராக அறியப்படும் ஒரு பொறியாளர். குவைத் பெட்ரோலியம் கம்பெனியில் பணிபுரிந்துக்கொண்டு சேவைகள் பல செய்து வருபவர் என்பது விசேஷ தகவல்.

-குவைத்திலிருந்து ஹரி லக்ஷ்மன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us