ஜெனிவாவில் உலக அமைதித் தூதர் மகரிஷி பரஞ்ஜோதியார் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஜெனிவாவில் உலக அமைதித் தூதர் மகரிஷி பரஞ்ஜோதியார்

செப்டம்பர் 28,2022 

Comments

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலை தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் செப்டம்பர் 26 ஆம் தேதி ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு வருகை புரிந்தார். ஐக்கிய நாடுகள் சபையில் அமைந்துள்ள சிரியாவிற்கான சிறப்புத் தூதர் அலுவலகத் தலைமை நிர்வாகி ராஜா .பி.ஆறுமுகம், உலக அமைதித்தூதர் மகரிஷி குருமகானைப் பூங்கொத்துக் கொடுத்து வரவேற்று ஐ.நா.அலுவலகத்தைச் சுற்றிக் காண்பித்து விளக்கியதுடன் மனித உரிமைக் கமிஷனின் நிகழ்வினையும் பார்வையிடச் செய்தார். ஐ.நா.சபை அலுவல்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். ஐ.நா. அவை அலுவல்கள் குறித்துக் கேட்டறிந்த மகரிஷி மகிழ்ந்து, ஐ.நா. அலுவலகத்திலிருந்து உலக மக்களுக்கு நல்லருளாசி வழங்குகையில்,

“ தனி மனித அமைதி மூலம் உலக அமைதி. உலகம் வேறு தனி மனிதன் வேறல்ல. தனி மனிதனே குடும்பமாகிறான். குடும்பமே சமுதாயமாகிறது. சமுதாயமே தேசமாகிறது. தேசமே உலகமாகிறது. தனி மனிதனிலிருந்து துவங்கி உலகமாக முடிகிறது. ஆகவே உலகத்தின் மாற்றம் என்பது தனி மனித மாற்றம். தனி மனித மாற்றம் என்பது தன் அகத்திலே அவன் சிந்தித்து தன்னுடைய குறைகள் எல்லாம் தெரிந்து அவற்றை நீக்கி உண்மையுள்ளவனாக, அன்புள்ளவனாக, துணிவுள்ளவனாக இருந்தால் நலமாக வளமாக மகிழ்வாக நிறைவாக நிறை செல்வத்துடன் நீடு வாழ்வான்.

'ஆக தனி மனித அமைதி குடும்ப அமைதியாக மலருகிறது. அது உலகம் முழுவதும் பரவுகிறது. தனி மனித அமைதி மூலம் உலக அமைதி ஏற்படுகிறது இத்தகு உலக அமைதிக்காகப் பணியாற்றி வருகின்ற ஐக்கிய நாடுகள் சபை நீடூழி வாழ்க. உலக நாடுகளிடை நல்லிணக்கத்தையும் நல்லுறவுகளையும் ஏற்படுத்தி, வருகின்ற நாட்களிலே உலக மக்கள் அனைவரும் ஒன்று என்ற உண்மையை உணர்த்தி, நாம் அனைவரும் ஒன்று, ஒன்றிலிருந்தே உருவானவர்கள் என்பதை வெளிப்படுத்துவோம்.

'குடும்பத்தில் தோன்றிய அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்வதைப் போல இந்த உலக மகா சக்தி என்ற ஒன்றிலிருந்து அனைத்து மனித குலமும், அனைத்து உயிரினங்களும் தோன்றியுள்ளது என்ற உண்மையை உணர்த்துவோம். அனைத்தும் இந்த ஒன்றிலிருந்தே தோன்றியதால் நாம் அனைவரும் உலகத்தின் மக்கள். எல்லோரும் எல்லாம் பெறுவதற்கான அனைத்து செயல்களும் கிட்ட ஐ.நா. மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறப் பரிபூரண நல்லருளாசிகள். இதனால் ஓருலகக் கூட்டாட்சி அமைந்து எல்லோரும் எல்லாம் பெற்று இன்புற்ற வாழ, வையகம் சாந்தியும் சமாதானமும் சந்தோஷமும் அடையப் பரிபூரண நல்லாசிகள்.'

ராஜா பி. ஆறுமுகம் இன்முகத்துடன் வரவேற்றதிலிருந்து அருளாசி பெற்று வழியனுப்புவது வரை உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

- தினமலர் வாசகர் மகிழ்நன்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us