கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு; திருவள்ளுவர் சிலை திறப்பு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

கம்போடியாவில் உலக திருக்குறள் மாநாடு; திருவள்ளுவர் சிலை திறப்பு

செப்டம்பர் 30,2022 

Comments

கம்போடியாவில் 5 நாள் உலக திருக்குறள் மாநாடு செப்டம்பர் 29 தேதி தொடங்கியது. அக்டோபர் மூன்றாம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த மாநாட்டின் தொடக்கமாக 29ஆம் தேதி காலை கம்போடிய நாட்டில் சீயான் ரீப் என்ற சுற்றுலா தலத்தில் கம்போடியா அரசு அலுவலகங்கள் இருக்கும் வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. இதை பண்பாட்டுத் துறையின் இயக்குனரான மூன் சொங்கிப் திறந்து வைத்தார்.

பாண்டிச்சேரி போக்குவரத்து மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் சந்திரா பிரியங்கா, விஜிபி உலக தமிழ் சங்கத் தலைவர் விஜி சந்தோஷம் முன்னிலையில் சிறந்த வாழ்த்து நடனத்துடனும் கம்போடிய முறைப்படி ஆராதனை செய்யப்பட்டும் சிலை திறந்து வைக்கப்பட்டது.

இதனை அங்கோர் வாட் தமிழ் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாச ராவ், ஞானசேகரன், ராமேஸ்வரன் 2019 நடக்க வேண்டிய திருக்குறள் மாநாடும் சிலை திறப்பும் நோய் தொற்றினால் தாமதப்பட்டு இரண்டு வருடங்கள் கழித்து தற்போது வெற்றிகரமாக செய்து காட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து உலக திருக்குறள் மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கின. அடுத்த இரண்டு நாட்களில் சொல்லரங்கம் கவியரங்கம் ஆய்வரங்கம் பாராட்டரங்கம் அனைத்தும் நடைபெற்றன.

- நமது ஹாங்காங் செய்தியாளர் சித்ரா சிவகுமார்


Advertisement
மேலும் ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)

உகாண்டா தமிழ் சங்க நிர்வாகிகள் (2022-2024)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us