சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா கோலாகலம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா கோலாகலம்

செப்டம்பர் 30,2022 

Comments

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் ஸ்ரீ சாரதா நவராத்திரி விழா செப்டம்பர் 26 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. நாள்தோறும் பத்து நாட்களும் காலையில் நவாக்ஷரி ஜெபம் – ஹோமம் மற்றும் சப்தசதி எனும் 700 ஸ்லோகத்தைப் பத்து முறை பாராயணம் செய்து அதை ஒரு முறை ஹோமம் செய்யும் நவசண்டி மஹா யாகம் நடைபெறுகிறது. மாலை கொலு மண்டபத்தில் அலங்காரத்தோடு வழிபாடுகளும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

அக்டோபர் 4 ஆம் தேதி வரை தினந்தோறும் காலை 6.30 மணிக்கு ஸ்ரீ தேவி மகாத்மிய பாராயணம் - எட்டு மணிக்கு நவாக்ஷரி ஹோமம் – 9.15 மணிக்கு ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் – 9.30 மணிக்கு பூர்ணாஹீதி – 10 மணிக்கு மகா தீபாராதனை – 10.15 மணிக்குப் பிரசாதம் வழங்குதலும் நடைபெறும். இரவு 7.30 மணிக்கு கொலு மண்டபத்தில் சிறப்பு வழிபாடும் – 8 மணிக்கு மகா தீபாராதனையும் 8.15 மணிக்குப் பிரசாதம் வழங்குதலும் நடைபெறும்.

நவராத்திரி முதல் நாளில் ஸ்ரீ அம்பாள் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்திலும் இரண்டாம் நாள் கருமாரி அம்மன் அலங்காரத்திலும் மூன்றாம் நாள் துர்க்கை அம்மன் அலங்காரத்திலும் நான்காம் நாள் அன்ன பூரணி அலங்காரத்திலும் எழுந்தருளி அருள்பாலித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் அலங்காரத்தில் ஜொலிக்க வைக்கின்றனர். சுரேஷ்குமார் தலைமையிலான ஆலய மேலாண்மைக் குழுவினர் கலை நிகழ்ச்சிகளிலும் அறுசுவைப் பிரசாதங்கள் வழங்குவதிலும் வியக்க வைக்கின்றனர். நாள்தோறும் பக்தப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு அம்மனருள் பெற்றும் அறுசுவைப் பிரசாதம் உண்டும் மகிழ்கின்றனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us