சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் அக்டோபர் 4 ஆம் தேதி எழுத்தறிவித்த இறைவன் – கல்விக்கதிபதி - ஸ்ரீ சரஸ்வதி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. வெள்ளைத் தாமரையில் – வீணையோடு வீற்றிருந்து வெண் பட்டுடுத்திக் காட்சியளித்தது மெய்சிலிர்க்க வைத்தது. வித்யாரம்பம் பெற மழலைகள் நிரம்பி வழிந்தனர். தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் பிள்ளைகளுக்கு அட்ச்சரம் எழுதி அன்னையின் ஆசி வழங்கிக் குதூகலிக்கச் செய்தனர்.
ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் தொண்டூழியர்கள் பிள்ளைகளுக்கு எழுது பலகைகள் – எழுது கோல்கள் பரிசளித்துப் பரவசப்படுத்தினர். சகலவித சௌபாக்கியங்களும் நல்கும் அன்னை ஸ்ரீ மூகாம்பிகையும் ஸ்ரீ சிவ கிருஷ்ணரும் சர்வ அலங்கார நாயகர்களாகக் காட்சியளிக்க – பக்தப் பெருமக்கள் அறுசுவைப் பிரசாதமும் அருட் பிரசாதமும் பெற்று மகிழ்ந்தனர்.
- நமது சிங்கப்பூர் செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.