ரோட்டரி இலங்கை மாவட்ட - 3220 ஆளுநர் புபுது டி சொய்சா, திருகோணமலை ரோட்டரி கழகத்துக்கு விஜயம் செய்தார். ஆளுநரின் செயலார் குமார் சுந்தராஜ் மற்றும் உதவி மாவட்ட செயலார் அஜித் ஜெயவிக்கரமாவும் அவருடன் இணைந்து கொண்டார்கள் . திருகோணமலை ரோட்டரி கழக தலைவர் - கிட்ணதாஸ் விருந்தினர்களை வரவேற்று, வரவேற்புரையை நிகழ்த்தினார் .
செயலாளர் எஸ். ஜெய்சங்கர் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகளின் அறிக்கை பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.புதிய உறுப்பினராக செலான் வங்கி மேனேஜர் எஸ். ஹரிதவர்ணன் திருகோணமலை ரோட்டரி கழகத் தில் இணைந்து கொண்டார். ஆளுநர் புபுது டி சொய்சா, தமது உரையில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைககளை பாராட்டியதுடன் மேலும் அதிக தரமான இளம் உறுப்பினர்களைச் சேர்க்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
2023-2024 வருடத்துக்கான தலைவராக தெரிவு செய்யப்படட வைத்தியர் சௌந்தரராஜன் நன்றியுரை நிகழ்த்தினார்.
- தினமலர் திருகோணமலை செய்தியாளர் ஞானகுணாளன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.