சிங்கப்பூர் ஈசூன் ஸ்ரீ புனிதமரம் பாலசுப்பிரமணியர் திருக் கோயிலில் ஸ்ரீ கந்த சஷ்டி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. அக்டோபர் 25 முதல் 30 வரை நடைபெறவுள்ள இவ்விழாவில் 29 ஆம் தேதி ஸ்ரீ அம்பாளிடமிருந்து வேல் வாங்குதல் நிகழ்வும் 30 ஆம் தேதி சூரசம்ஹாரமும் 31 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவிருக்கின்றன. இந்த நாட்களில் நாள்தோறும் கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணமும் சத்ரு சம்ஹார த்ருஸதி அர்ச்சனையும் நடைபெறும். பக்தப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ கந்தனருள் பெற்றுய்யுமாறு ஆலயம் அழைக்கிறது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.