ஆக்லாந்தில் ஸ்ரீநிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம் 2022 | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஆக்லாந்தில் ஸ்ரீநிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம் 2022

நவம்பர் 23,2022 

Comments

ஓம்நமோ நாராயணாய!

ஸ்ரீ ஸ்ரீனிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம்) என்பது நியூசிலாந்தின் சனாதன தர்ம பரிபாலன சேவா டிரஸ்ட்மூலம் 2019 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். வெலிங்டன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஸ்வாமி கோயிலின் முதன்மை நிகழ்வாகும். லோக க்ஷேமார்தம் தர்மப் பிரச்சாரம் என்றமுக்கிய நோக்கத்துடன் கல்யாணம் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சி கிரேட்டர் வெலிங்டன் பகுதியில் உள்ள பெரிய பக்தர் சமூகத்தினரால் நடத்தப்படும் ஒன்றாகும்.

சனாதன சேவா சங்கத்தினர் வெலிங்டன் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பெருமாள் கோயில் கட்டிட நிதிக்காக, சென்ற ஞாயிறன்று (20/11/2022) ஆக்லாந்தில் உள்ள ஷீரடி சாய் பாபா கோயில் உள்ளரங்கத்தில் ஸ்ரீனிவாச கல்யாணம் விமரிசையாக நடத்தினர்,

முதல்நாள் சனிக்கிழமை மலை 6 மணியளவில் ஸ்ரீ சாகேத் விஷ்ணுபோட்லா அவர்களின் வீணை கச்சேரி நடைபெற்றது அவருடன் ஸ்ரீ அவினாஷ் ஜெய்சங்கர் அவர்கள் மிருதங்கம் வாசித்தார்கள். கச்சேரியில் ஸ்ரீ தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர், புரந்தரதாசர் அவர்களின் கீர்த்தனைகள் மிகச்சிறப்பாக அமைந்தது.

ஞாயிறன்று காலை 7 மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. அவ்வமயம் பக்தர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் கூறி பெருமாளை வணங்கினர். ஸ்ரீனிவாசஸ்வாமி கல்யாண மஹோத்ஸவம்என்பது வைதீக மற்றும் லௌகீக நடை முறைகளுடன் கூடிய ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பு வாய்ந்த வைபவம் ஆகும்,

அங்கு பக்தர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கி இறை வனுக்குத் திருமணத்தை பாட்டு மற்றும் நடனம் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பக்தியுடன் மற்றும் பாவத்துடன் நடத்துவதன் மூலம் மகத்தான ஆனந்தத்தை அடைகிறார்கள் என்றால் மிகையாகாது.. மிக விமர்சையாக நடை பெற்ற இந்த தெய்வ திருமணத்தில் மணமக்கள் ஊர்வலம், ஊஞ்சல், மற்றும் நாம சங்கீர்த்தனம் பாடி, மாங்கல்ய தாரணத்துடன் வைதீக முறைப்படி ஸ்ரீனிவாச கல்யாணம் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான முறையில் கல்யாண போஜனம் அளிக்கப்பட்டது.

இந்த தர்ம பரிபாலன சேவா சங்கம் கைங்கர்யங்களுடன் அயராது சேவை செய்யும் பக்தர்களயும் தொண்டர்களையும் பெ ற்றிருப்பது சிறப்பு.

- தினமலர் ஆக்லாந்து செய்தியாளர் சந்திரா சங்கரன்


Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us