அமெரிக்காவில் சாஃப்ட்வேரில் சாதித்து வரும் இளம் தமிழக தம்பதி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அமெரிக்காவில் சாஃப்ட்வேரில் சாதித்து வரும் இளம் தமிழக தம்பதி

நவம்பர் 26,2022 

Comments (3)

பொறியியல் அதுவும் குறிப்பாய் சாஃப்ட்வேர் படித்துவிட்டால் உடனே வேலையும் சொகுசான சம்பாத்யமும் உறுதி என்று நினைத்து தான் பலரும் கணினி படிப்பு பக்கம் பாய்கிறார்கள். ஆனால் யதார்த்தத்தில் எப்படி?. பொறியியல் முடிக்கிற அனைவருக்கும் இங்கு வேலை கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் அவைகள் நிலைப்பதில்லை- என்கிற நிலைமையே இருக்கிறது.

படித்தால் போதும் உடனடி வேலை என்கிற மிதப்பிற்குபின் வாய்ப்புகள் கிடைக்காமல் விரக்தியில் தளர்ந்து போபவர்களும் அதிகம். அப்படி இருந்து விடக் கூடாது- பொறியியலோடு வேலைக்கு வேண்டிய உபரி படிப்புகளுடன் முயற்சியை தொடர்ந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஒரு உதாரணமாய் திகழ்கிறார் அமெரிக்காவில் 'அக்னி சாஃப்ட் வேர்ஸ்” மற்றும் அக்னி டிரேடர்ஸ் கம்பெனிகளின் நிறுவனரான ஜெ.விஜய் ஆனந்த்.

இவர் திருச்சி-துறையூர் அருகே வேலாயுதம் பாளையம் எனும் சிறிய கிராமத்தை சேர்ந்தவர்.அப்பா ஜெயராமன் (ME- Phd)--REC, ERODE-IRTT  களில் படிப்பித்து ஓய்வுக்குப் பின் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங்கில் பிரின்ஸ்பாலாக பணியாற்றியவர்.

அப்பா ஆழ்ந்த அறிவுக்கு சொந்தக்காரர். எளிமையும் அமைதியும் கொண்டவர்.வீடு மற்றும் வயல் நிர்வாகம் பார்த்து வரும் அம்மா ராஜம் கனிவும் துணிவும் மிக்கவர். ஆனந்த்த்திடமும் அவரது சகோதரர் ராஜேஷிடமும் தந்தையின் அறிவு ஆற்றலும், தாயின் கட்டுப்பாடு மற்றும் துணிவும் இயல்பாகவே அமைந்துள்ளது. ஆனந்திற்கு ஊர் பற்று- நாட்டுப்பற்று அதிகம். அவர் ஈரோடு அரசு பள்ளிக்குப் பிறகு கல்லூரிக்கு செல்லும் முன்பே ஏர்போர்ஸில் சேரனும் என்று ஆசைப்பட்டு அதில் தேர்வும் பெற்றார்.பெற்றோருக்கு சிரமம் தராமல் இளம் வயதிலேயே சம்பாதிக்க வேண்டும் எனும் தீவிரம் அப்போது.

ஆனால் பெற்றோர்களோ சம்பாதிப்பது எப்போது வேண்டுமானாலும் ஆகலாம்-படிக்கிற வயதில் படிப்பில் கவனம் இருக்கட்டும் என்று அறிவுறுத்தினார்கள். ஆனந்தை டாக்டராக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருந்தது. அது கை கூடாததால்IRTT யில் B.E ( E C)முடித்தார். இவர் முடித்த சமயம் கணினி துறை மிகவும் சோர்ந்து போய் இருந்தது. வேலை எங்கும் கிடைக்கவில்லை. இன்ஜினியரிங் படிக்காமல் பேசாமல் ஏர்போர்ஸ் போயிருந்தால் நாட்டுக்கும் ஆச்சு-வீட்டுக்கும் சம்பாத்யம் ஆகியிருக்குமே என்ற மன ஓட்டம்!

படிக்காதவர்களுக்கு வேலை இல்லை என்பதை விட படித்தவர்கள் சும்மா இருக்கிறார்கள் எனும் போது வீட்டினருக்கு பிரச்சனை இல்லாவிட்டாலும் கூட ,அக்கம் பக்கம் மற்றும் சமூகத்தின் ஏளன பார்வையை ஏறிடுவது என்பது மகா கொடுமை! அதனால் ஊரில் இருந்தால் தானே பிரச்சனை,சென்னைக்கு சென்று விடலாம் என்று யோசித்த வேளையில்--ஆனந்த்தின் கல்லூரியில் படித்த சீனியர் நண்பர் சொந்தமாய் சாஃப்ட்வேர் கம்பெனி ஆரம்பித்து, இவரையும் அழைத்துக் கொண்டார்.

சென்னையில் போதுமான ப்ராஜக்ட்கள் கிடைக்காமல் அக் கம்பெனி விசா எடுத்து ஆனந்தை அமெரிக்காவிற்கு அனுப்பிற்று. அத்தோடு (2001) ல் அமெரிக்க இரட்டைக் கோபுர தாக்குதலால் இன்னும் அதிக சோதனை.! அப்போது SAP( System Application in data process)டித்தால் அமெரிக்காவில் வாய்ப்புகள் அதிகம் என கேள்விப்பட்டு அதை முடித்தார். அந்த கஷ்டங்கள் எல்லாம் அவரை புடம் போடுவதாகவே அமைந்தன. வாழ்வில் எது வந்தாலும் எதிர் கொள்ளலாம்- முயன்றால் முடியாதது இல்லை என்கிற வைராக்கியத்தை அவருக்குள் ஏற்படுத்தி தந்திருந்தன.

அந்த நேரம் கனடாவில் வாய்ப்புகள் தெரிய, ஆனந்த் அங்கு அனுப்பப்பட்டார். அங்கோ கடுங்குளிர். பனிமலை!அரபு நாடுகள் போலவே ஸ்ரீலங்கன் தமிழ் நண்பர்களுடன் ஷேரிங்கில் அறை!சாப்பாடு-குளியல் எல்லாம் மகா ரோதனை! ஆனாலும் கூட அதிகாலை வெளியே சென்றால் இரவு வரை வேலை செய்து 6 மாதத்தில் ஊர் கடனை அடைத்தார்.

கனடா ப்ராஜக்ட் முடிந்து விட மறுபடியும் அமெரிக்கா! மறுபடியும் வேலை தேடும் படலம்! அப்போது அதிர்ஷம் அழைத்து தமிழ் நண்பர்கள் மற்றும் அண்ணா யுனிவர்சிட்டியில் படித்தவரின் புது கம்பெனியில் வாய்ப்புகள் அமைந்தன. அமெரிக்காவின் சாப்ட்வேர் துறையில் இன்றும் கூட தெலுங்கர்கள் தான் முன்னணியில் இருக்கின்றனர் அங்கு சாப்ட்வேரில் ஏதாவது தேவைப்படுகிறது என்றால் உடனே ஹைதராபாத்திற்கு சொல்லி தயார் பண்ணி அவற்றை கொண்டு வந்து விடுவார்கள். அதை அறிந்ததிருந்ததால் ஆனந்த்தும் அவர்களுடன் நட்பாகி தன் திறமைகளை வளர்த்துக் கொண்டார். இரண்டு வருடம் போய் சம்பாதித்து ஊர் திரும்பி விடலாம் என்கிற பொதுவான மன நிலையில் தான் ஆனந்தும் அமெரிக்கா சென்றிருந்தார்.

ஓரளவு சம்பாதித்ததும் ஊர் திரும்பி விவசாய பண்ணை, மற்றும் அண்ணாமலை ரஜினி போல மாட்டுப் பண்ணை வைத்து தனது உழைப்பு பலனை நம் நாட்டிற்கே திரும்பத் தர வேண்டும் என்பது ஆனந்தின் கனவாக இருந்தது. ஆனால் சென்றது H1 விசா என்பதால் ஊருக்கு வந்தால் திரும்பிப் போக முடியாத நிலைமை. கிரீன் கார்ட் பெற்றாலும் - ஆறு மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்கா சென்றாகனும். சிட்டிசன்ஷிப் கிடைத்தாலும் கூட ஒரு பிரச்சனை உண்டு.

இந்தியாவின் அவர்கள் பிசினஸ் செய்யலாம்.ஆனால் ஊரில் விவசாய நிலங்கள் வாங்க முடியாது. இந்த சூழலில் பாலாஜி எனும் தொழில் முனைபவரின் அறிமுகம் ஆனந்த்துக்கு வரபிரசாதமாக அமைந்தது. அவர், “உன் படிப்பு-திறமை- பெற்றுள்ள அனுபவங்களை வைத்து நீயே ஏன் சொந்த கம்பெனி ஆரம்பிக்கக் கூடாது?” என்று வழிகாட்டினார்.அப்போது உருவானது தான் இவரது Agni Softwaresநிறுவனம்!ஆனந்த் சும்மா இருப்பதில்லை. எப்போதும் எதிலாவது ஈடுபட்டு ஓடிக்கொண்டே இருப்பார். அமைதியானவர் என்றாலும் கூட செயலில் தீவிரவாதி.

அதனால் ஒரு கம்பெனியில் சேர்ந்து ஐக்கியமாகி அமர்வதில் இவருக்கு உடன்பாடு இல்லை.கற்ற பெற்ற அனுபவங்களை வைத்து வெளியே கிளம்பினால் மணிக்கணக்கில் பொருளீட்ட முடியும் என்பதை அனுபவத்தில் அறிந்திருந்தார். அமெரிக்காவிற்கு செல்வதே பணம் சம்பாதிக்க தான் எனும் போது அதை விரைவாகவும் வீரியமாகவும் செய்ய வேண்டும் என்று,ஆனந்த் பெரிய பெரிய நிறுவனங்களுக்கு சாஃப்ட்வேர் கோடிங் செய்து கொடுத்து வருகிறார்.அதன் முலம் மணிக்கு இவ்வளவு என டிமாண்ட்!

சில சமயம் ஆர்டர்கள் கிடைக்காமல் போனாலும் கூட அஞ்சுவதில்லை. தான் மட்டும் பிழைத்தால் போதாது, அறிந்தவர் தெரிந்தவர்களும் கூட முன்னேறனும் என்று ஒரு குழு உருவாக்கி அமெரிக்காவில் எந்த மூலையில் ப்ராஜக்ட் என்றாலும் வலை வீசி வெற்றி பெறுகிறார். ஒரு சமயம் லெனடைன் எனும் ரஷியா கம்பெனி காரர் வெறும் கோடிங் மட்டும் செய்தால் போதாது மார்க்கெட்டிங்கிலும் இறங்குகள் என்று தூண்டவே அவற்றிலும் ஆனந்த் இறங்கினார். அதிலும் கூட ஜல்லி!

ஆனந்தின் பலம்- தன்னம்பிக்கை.ஆன்மீக பற்று! கோபமின்மை! வந்ததை வரவில் வைத்து போனதை பற்றி கலங்காத சுபாவம்--. டேக் இட் ஈஸி பாலிஸி! இவற்றுடன் இவரது முக்கிய பலமாக அமைந்திருப்பது சாப்ட்வேர் இன்ஜினியரான மனைவி அபர்ணா!திருச்சி மாவட்டத்தில் நம்புகுறிச்சி எனும் கிராமத்தில் பெற்றோர்கள் பிரசன்ணம்- தேன்மொழியின் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். சென்னையில் I Softஎனும் கம்பெனியில் வேலை பார்த்து திருமணத்திற்கு பிறகு இப்போது அமெரிக்காக Pittsburgh--ல் பெரிய நிறுவனத்தில் தனது சகோதரர் சரவணனுடன் பணிபுரிகிறார். ஆனந்துக்கு இவர் பக்க பலம்.

மகள் அக்சரா மகன் விதுனுடன் இவர்களது இல்லறமும் சிறக்கிறது.பிள்ளைகளுக்கு படிப்புடன் - நம் கலாச்சாரம் தமிழ்,பரதம் புல்லாங்குழல் பயிற்சி, கராத்தே என பயிற்று வித்து வளர்க்கிறார்கள். வாழ்வில் வெற்றி என்பது வெறும் பணம் சம்பாதிப்பதில் மட்டுமில்லை. இந்த சமூகத்திற்கும் திருப்தி தர வேண்டும். தேவைக்கு உதவ வேண்டும் என்பது இருவரின் ஒருமித்த விருப்பம். அந்த லட்சியத்தில் அமெரிக்காவிலும் ஆதரவற்றவர்களின் செல்டர்களுக்கு, தொண்டு நிறுனனங்களுடன் இணைந்து உணவு தயாரித்து வழங்குகிறார்கள். குழந்தைகளையும் ஊக்குவித்து செடிகொடிகள்-சுற்று சூழல் பராமரிப்பும் செய்து வருகிறார்கள்.

இறை அருளில் அபர்ணாவின் கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 10 மென் பொறியாளர்கள் இருகிறார்கள் .அவர்களுடன் இவர்களும் இணைந்து 'We help' எனும் குழு உருவாக்கி, மருத்துவம்- படிப்பு போன்ற உதவிகள் செய்து வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கான இவர்களின் பங்களிப்பு அபாரம்!. வளரட்டும் இவர்களது தொண்டு!

-என்.சி.மோகன்தாஸ்

பட மிக்ஸ்; ஹரிலக்ஷ்மன்
Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!

டிசம்பர் 4 ல் டெக்சாஸ் ஹூஸ்டனில் 'திருக்குறள் திருவிழா'!...

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு

நவ,27, அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் குடும்ப சந்திப்பு...

டிச., 17 - 18 நாம ருசி 2022

டிச., 17 - 18 நாம ருசி 2022...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
Paraman - Madras,United States
28-நவ-202211:38:38 IST Report Abuse
Paraman உப்பு நின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும்...தவறு செய்து...மேலேறியவர்கள் அதற்க்கான தண்டனையை, வியலையை கொடுத்து தான் ஆகவேண்டும்..பலநாள் திருடர்கள் ஒருநாள் கண்டிப்பாக மாட்டுவார்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
.Dr.A.Joseph - London,United Kingdom
25-நவ-202203:45:17 IST Report Abuse
.Dr.A.Joseph தம்பி உங்க பின்புலம் வலுவாக உள்ளது .நீங்க சோதனைகளை மேற்கொள்ளலாம், ஆனால் இங்கே பிரச்னை என்பது எந்த ஆதாரமும் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us