துபாய் : அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் 22வது முறையாக வளைகுடா அளவிலான கல்லூரி மாணவ, மாணவியருக்கான வருடாந்திர பேச்சுப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் 490 பேர் பங்கேற்றனர். இவர்கள் சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆங்கிலம் மற்றும் அரபி மொழியில் பேசினர்.
இந்த போட்டிக்கு நடுவர்களாக பல்வேறு துறையில் அனுபவமிக்க பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்த போட்டியில் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் செயல்பட்டு வரும் அல் யமாமா பல்கலைக்கழகம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக் கோப்பையை அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி வழங்கினார்.
- நமது செய்தியாளர் காஹிலா
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.