துபாய் :துபாய் செண்ட் ரல் பள்ளிக்கூடத்தில் 20வது ஆண்டாக இஸ்லாமிய திருவிழா நடந்தது. இதனையொட்டி ஆண் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே திருக்குர் ஆன் மனப்பாடப் போட்டி, பாங்கு சொல்லும் போட்டி, பேச்சுப் போட்டி என பல்வேறு வகையான போட்டிகள், பல்வேறு வயதுடைய பிரிவுகளில் சர்வதேச அளவில் நடந்தது. இந்த போட்டிகள் நவம்பர் 24 ஆம் தேதி மாணவிகளுக்கும், 26 ஆம் தேதி மாணவர்களுக்கு நடந்தது.
இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளிக்கூடத்தின் இயக்குநர் காலிப் சாஹிப் தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர். போட்டிக்கான நடுவர்கள் துபாய் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்தனர். துபாய் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போட்டியை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர் இளையான்குடி பேராசிரியர் முனைவர் பி.என்.பி. முஹம்மது சஹாபுதீன் பார்வையிட்டார். மிகவும் சிறப்பான வகையில் செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளை பாராட்டினார்.
இந்த போட்டிக்கான பரிசுகள் வரும் ஜனவரி மாதம் பள்ளிக்கூட ஆண்டு விழாவில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.