லேகோஸ், நைஜீரியா: லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் 11ம் ஆண்டு வருஷாபிஷேகம் (கும்பாபிஷேக தினம்) 27.11.2022 ஞாயிறு அன்று விமர்சையாக நடைபெற்றது. 108 சங்கு வைத்து அதில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சிவகுமார் சிவாச்சாரியார் மிகவும் திறம்பட செய்து இந்த வைபவத்தையும் சிறப்பாக்கினார். காலை 8 மணி அளவில் ஆகம விதிப்படி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழா கலச ஆவாகன பூஜை, ஹோமம், அபிஷேகம், தீபாராதனையோடு12 30 மணியளவில் சிறப்பாக நடந்து முடிந்தது. வருஷாபிஷேக தினத்தை முன்னித்து அன்னதானமும் நடைபெற்றது.
- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.