அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அஜ்மானில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு

நவம்பர் 29,2022 

Comments

அஜ்மான்: அஜ்மானில் உள்ள ஹமிதியா பூங்காவில் (ஹீலியோ பூங்காவில்) திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தினரின் வருடாந்திர சந்திப்பு மற்றும் அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம் 27.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மிகச்சிறப்பாக நடந்தது.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் தலைவர் பூதமங்கலம் முஹம்மது ஜியாவுதீன் தலைமை வகித்தார். அவர் தனது உரையில் மிக அதிக அளவில் முன்னாள் மாணவர்கள் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. கல்லூரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 'குளோபல் அலுமினி பிளாக்' என்ற புதிய கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்கு அமீரக முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு கணிசமாக இருக்கும் வகையில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்த வருடாந்திர நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கல்லூரியின் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சந்திப்பு நிகழ்ச்சி ஒவ்வொரு அமீரகத்திலும் நடக்க வேண்டும். மேலும் கல்லூரியில் படித்து வரும் வசதியற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

தொடக்கமாக இறைவசனங்கள் ஓதப்பட்டது. கல்லூரியின் முன்னாள் துணை முதல்வர்கள் முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர், முனைவர் பேராசிரியர் பி.என்.பி. முஹம்மது சஹாபுதீன், கணினி அறிவியல் துறையின் துணைப் பேராசிரியை எஸ். பிரபாவதி, பர்சேஸ் துறையின் அலுவலர் பி. வில்லி ஜான்சன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது பேசிய முனைவர் பேராசிரியர் பீ.மு. மன்சூர்,அமீரகத்தில் கல்லூரியின் முன்னாள் மாணவர்களின் இந்த வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரியில், விடுதியில் சந்திப்பது போன்றதொரு நினைவை ஏற்படுத்துகிறது. இதுவரை நான் பார்த்ததில் இந்த நிகழ்வு மிகப்பெரிய சந்திப்பாக அமைந்திருப்பது மன நிறைவை அளிக்கிறது என்றார்.

முனைவர் பேராசிரியர் பி.என்.பி. முகம்மது சகாபுதீன் தனது உரையில்ஒழுக்க கல்வியின் அவசியம் குறித்து வலியுறுத்தினர். கணினி அறிவியல் துறையின் துணைப் பேராசிரியை எஸ். பிரபாவதி தனது உரையில் அமீரக முன்னாள் மாணவர்கள் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பணிகளுக்கு உதவி வருவது சிறப்புக்குரியது என்றார்.

உரி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் ஆண்கள், பெண்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோருக்கு நடத்தி பரிசுக் கோப்பை வழங்கப்பட்டது. துபாய் சூப்பர் சோனிக் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட அதிர்ஷ்டபரிசு தொலைக் காட்சியை பெட்டியை பெற பைசல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்டு கரகோசத்துக்கு மத்தியில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

துபாய் தமிழ் சங்கத்தின் தலைவர் ஏ. முகம்மது தாஹா, சமூக ஆர்வலர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஏ. முகம்மது முகைதீன், குத்தாலம் அஷ்ரப் அலி, அமீரக காயிதேமில்லத் பேரவையின் துணைப் பொதுச்செயாளர் இராமநாதபுரம் பரக்கத் அலி, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் யாசின் உள்ளிடோர் வாழ்த்துரை வழங்கினர்.

முதுவை ஹிதாயத்துல்லா நன்றியுரை நிகழ்த்தியதுடன், நிகழ்வினை தொகுத்து வழங்கினார். முகம்மது இசாக், மன்னர் மன்னன், நவாசுதீன், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஜாபர் சித்திக், ஜாபர் சாதிக், ஆவை அன்சாரி, ரஹ்மத்துல்லா, முஹம்மது முஸ்தபா உள்ளிட்ட குழுவினர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்புடன் செய்திருந்தனர். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

இந்த விழா சிறப்புடன் நடக்க மொலினா டிரேடிங், அண்டோலியா நிறுவனம், பவர் குரூப் ஆப் கம்பெனி, பிளாக் துலிப் பிளவர்ஸ், கல்லிகன் வாட்டர், ரொமானா வாட்டர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தேவையான ஆதரவை வழங்கின.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us