அமெரிக்காவில் தொழில் முனைவராக சாதிக்கும் தமிழக இளைஞி... | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

அமெரிக்காவில் தொழில் முனைவராக சாதிக்கும் தமிழக இளைஞி...

டிசம்பர் 01,2022 

Comments

படிப்பில் உச்சம் தொட்டு,பல கோடிகள் பிசினஸ் செய்தாலும் கூட- 'பணத்தைவிட எத்தனை பேரின் வாழ்விற்கு உதவ முடிகிறது என்பதையே பெரிதாய் நினைக்கிறேன்' என்று பெருமிதப்படுகிறார்... அமெரிக்கா-டெக்ஸாஸ் மாகாணத்தில் தொழில் முனிவராக இருக்கும் ஸ்வர்ணா மோகன்.

ஸ்வர்ணாவிற்கு பூர்வீகம் திருச்சி‌. ஆடிட்டரான அப்பா மோகன் நேர்மை-நாணயம் என வாழ்ந்தவர்.விஷயஞானம்கொண்டவர்.. வருமானம் பெரிதல்ல என்று வாடிக்கையாளர்களுக்கு மதிப்பளித்து செயலாற்றினவர். வீட்டை நிர்வகித்து வந்த அம்மா தேவி யதார்த்தவாதி. துணிச்சலாய் முடிவு எடுக்கக் கூடியவர்.மனித நேயத்திற்கு பங்கம் வராமல் நடப்பவர். குடும்பத்தில் வசதி வாய்ப்புகளை பெருக்க வேண்டி களத்தில் இறங்கி சிறிய அளவில் பொருட்கள் விற்பனை செய்து வந்தார். தயக்கமோ,பயமோ இல்லாமல் எதையும் முயன்று பார்த்து விடும் தீவிரம் உள்ளவர்.

சாதாரணமாய் பெண்கள் ரியல் எஸ்டேட் பிசினஸ் பக்கம் செல்வதில்லை. இவர் அதில் இறங்கி சென்னையில் வெற்றிகரமாய் செய்து வருகிறார். ஆக...தந்தையின் நேர்மை-நாணயம் கல்வி அறிவும் ,தாயின் துணிவுடனா தொழில் திறனும் ஸ்வர்ணாவின் ரத்தத்திலும் வியாபித்திருக்கிறது. 'முடிந்தவரை படிக்கவேண்டும்--சொந்தக்காலில் நிற்கவேண்டும் ' என்று அப்பா தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தார்.கஷ்ட நஷ்டம்—உலகம் புரியுவேண்டும் என்று பள்ளிக்கு ஸ்வர்ணாவையும், தங்கை பிரசாந்தினியையும் பஸ்லிலேயே அனுப்புவார். இப்படி சமூகத்தில் ஆண்கள் போல துணிச்சலும் மன பலத்துடனும் ஸ்வர்ணா செயல்படும் பக்குவம் சிறு வயதிலேயே ஊட்டப்பட்டிருந்தது.

அதன் மூலம் சொர்ணா மட்டுமில்லை-படிப்பில் தங்கை பிரசாந்தினியும் பப்ளிக் ஹெல்த்தில் MBA மற்றும் Phd முடித்து லாஸ் ஏஞ்ஜெல்ஸ் குழந்தைகள் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். சென்னையின் பள்ளி படிப்பிலேயே ஸ்வர்ணா கெட்டி! படிப்போடு குவிஸ்,விவாத களங்கள் போன்ற போட்டிகளில் கலந்து கொண்டும் வெல்வார். ஸ்வர்ணா உலக அளவிலான WWF ( World wide Fund for Nature)அமைப்பில் தலைவராக இருந்து சுற்றுச்சூழல், மிருக நலன் என செயல்பட்டிருக்கிறார்.

அத்துடன் ஞாயிறுகளில் பாலவிஹார் வகுப்புகள்!.அதன் மூலம் கடமை- கண்ணியம்-கட்டுப்பாடு ஒழுக்கம்-மத வித்யாசம் இல்லா ஆன்மீகம் என எல்லாம் கற்றுக் கொள்ள முடிந்திருக்கிறது..பகவத் கீதை போட்டியில் மாநில அளவில் முதலிடமும் பெற்றுள்ளார். இவரது பால விஹார் பயிற்சி, கல்லூரி போகிற வரை தொடர்ந்தது என்பது ஆச்சரியமான ஒன்று.

ஸ்வர்ணாவுக்கு ஆர்கிடெக்ட் படிக்க வேண்டும் என ஆவல் ஏற்பட்டு .அதன் கோச்சிங்கி மாநில அளவில் ஐந்தாம் இடம்.பெற்றிருந்தார். பிறகு ஆசான் சாலமன் மூலம்CEPT ( Centre  for Environmental Planning and Technology)பரீட்சை! அதற்காக அம்மா ,பெரியம்மாவுடன் அகமதாபாத் சென்று பத்து நாட்கள் தங்கி தேர்வு எழுதி, தேர்ந்திருந்தாலும் கூட வேறு மாநிலம என்பதால் அந்த கோட்டாவில் இவருக்கு சீட் கிடைக்காததில் வருத்தம்.

அந்த சமயம் (2004) BITS PILANI யில் பொறியியல்படிக்க வாய்ப்பு வந்தது. அங்கு இரட்டைப் படிப்பாக BE ( E&II) மற்றும் Masters ( Physics) முடித்தார்.அதன் பெரும்பகுதி செலவு ஸ்காலர்ஷிப்பில் பூர்த்தியானது என்பதில் இவருக்கு பெருமிதம். ஸ்வர்ணா கல்லூரி ஆரம்ப நாட்களில் ரொம்ப துடுக்காக-கொஞ்சம் அடாவடியாக செயல்பட்டவர்.அங்கு டீம் ப்ளேயராக சேர்ந்ததும் அது கட்டுக்குள் வந்தது.

பிறரை அனுசரித்து, டிப்ளமேட்டிக்காக அணுகுவது, நிதி மற்றும் நேர நிர்வாகத்துடன் சுயமாய் ஒரு பொறுப்பை எப்படி நிர்வகிப்பது என்பதை எல்லாம் அங்கு கற்றுக் கொள்ள முடிந்தது. படிப்பு முடிந்ததும் கேம்பசிலேயே TCS ல் வேலை கிடைத்தது. அதே நேரம் MAGMAஅஎனும் சிறிய நிறுவனத்திலும் வாய்ப்பு! Chip Software க்கு Support - Semi Conductor வேலை)எல்லோரும் சாப்ட்வேர் போகிறார்களே,நாம் மாறுபட்ட துறைக்கு செல்லலாம் என அதில் சேர்ந்தார்.

அதன் மூலம் எதிர்பார்த்தப்படியே நிறைய அனுபவங்கள்!.அங்கு SWOT குழு ஆரம்பிக்கப்பட்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவிற்கு சென்று வரும் வாய்ப்பு ஸ்வர்ணாவுக்கு கிடைத்தது. திருமணத்திற்கு பிறகு அக் கம்பெனி மூலமாகவே டெக்ஸாசின் ஐக்கியம்!அடுத்து ஆச்டினுக்கு மாற்றம். ஒரு கட்டத்தில்-அங்கு சவாலான வேலை இல்லாமல்- ஒரே மாதிரி இயங்குவதில் மனம் திருப்திப்படவில்லை

அந்த நேரம் பெற்ற தாயின் ரத்தம் சொந்தமாய் ஏதாவது செய்- களத்தில் இறங்கு என்று உற்சாகப்படுத்த ஆரம்பித்தது. அதன் பலனாய் அமெரிக்காவில் வீடுகளை ஆன்லைனில் வாங்கி விற்க ஆரம்பித்தார்.அத்துடன் அங்கே திரைசீலைகள் விலை அதிகம்.என்பதால் ஏன் நம்முரிலிருந்து தருவித்து விற்கக் கூடாது என்று --

2010ல்'LUSH LIVING 'எனும் நிறுவனம் ஆரம்பித்து இந்தியாவில் கர்ட்டன்கள் வாங்கி US,UK  விலும் வெற்றியுடன் விநியோகித்து வருகிறார்கள்... பிறரை நம்பி இருக்காமல் அவற்றை நல்ல தரத்துடன் தர வேண்டும் என்று 2014இல் சொந்தமாகவே நீலாங்கரையில் கடை ஆரம்பித்து அது- இன்னும் கூட தொடர்கிறது.

அடுத்தடுத்து வெவ்வேறு கதவுகள் திறக்கப் படவே குழந்தைகளுக்கு (மகள்கள் அஞ்சனா சகானா) நேரம் ஒதுக்க வேண்டிஸ்வர்ணா வேலையை விட்டார்.பிறகு வீடுகள் வாங்கி வாடகைக்கு கொடுப்பது என ஆரம்பித்து 2015 ல் ரியல் எஸ்டேட் செய்ய லைசென்ஸ் பெற்றார். அதில் கிடைத்த நற்பெயரில் வாடிக்கையாளர்கள் பெருக ஆரம்பித்தனர்.அந்த சமயம் சிவஜோதி என்பவருடன் சேர்ந்து பிசினஸ் ஆரம்பித்தத்தில் நல்ல பலனும் அனுபவும் கிடைத்து.

அமெரிக்காவில் எடுத்தவுடன் யாரும் தனியாய் ரியல் எஸ்டேட் செய்ய முடியாது. அதற்காக பெரிய நிறுவனத்துடன் சேர்ந்து தான் செயல்பட முடியும்.முதலில் வீடு அடுத்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என தொடர வேண்டிTexas Accredited Commercial Specialist (TACS) படிப்பையும் முடித்தார். இன்று இவரது 'Full circle Real Estate' கம்பெனியின் கீழ் 15 க்கும் மேற்பட்ட பெண்முகவர்கள் இயன்குகிரார்கள்.இதற்காக வீட்டில் ஓய்வாகவும், பொருளாதார தேவைக்காக வாய்ப்பு தேடியும் இருக்கும் பெண்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களுக்கு நல்ல கமிஷனும் கொடுக்கிறார்.

இதனால் பெண்களுக்கும் சொந்தமாய் வருமானம் ஈட்டும் சந்தோஷமும் திருப்தியும் கிடைக்கிறது. அங்கு கொரோனா காலத்தில் டல்லடித்த ரியல் எஸ்டேட்- டெக்ஸாஸின் ஆஸ்டின் பகுதியில் ஆப்பிள், டெஸ்லா, சாம்சங் போன்ற பல கம்பெனிகள் வரவே உச்சத்தை எட்டி இருக்கிறது. இதன் மூலம் இவர்களுக்கு சென்ற வருடம் ரூபாய் 1200 கோடிகள் அளவிற்கு பிசினஸ்! நடந்திருக்கிறது.சமீபத்தில் 600 ஏக்கர்கள் வாங்கி, விரிவாக்கம் செய்து வருகிறார் ஸ்வர்ணா.

ஸ்வர்ணாவிற்கு அவரது தாத்தாவில் ஆரம்பித்து அம்மா, அப்பா அனைவருமே ரோல் மாடல்கள் ! தாத்தா,ஸ்ரீலங்காவில் டீ எஸ்டேட் நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்தவர்.அவரது மறைவு சமயம்- அத்தனை பேரும் துக்கம் அனுஷ்டித்த சம்பவம் ஸ்வர்ணாவின் நெஞ்சைத் தொட்டது. சம்பாத்தியம் ஒருபக்கம் இருந்தாலும் நாமும் அப்படி வாழனும் என்று சேவை பக்கம் அவரை திருப்பி உள்ளது.

அவரது பலம்--- ஆத்மார்த்தமான- புத்திசாதுர்யமான-துணிவான ரிஸ்க் எடுக்க தயங்காத கடின உழைப்பு! சரியான நேரத்தில் தாமதம் இல்லாமல் முடிவெடுக்கும் திறன்! ஸ்வர்னா எதற்கும் கலங்குவதில்லை. பிற பெண்கள் போல் கஷ்ட நஷ்டங்களுக்காக தளர்ந்து போகாமல் அதிலிருந்து மீளுவதற்கு வேண்டியதை பற்றி சிந்திப்பது இவரது இன்னொரு சிறப்பு.

அது போலவே மன அமைதியும் சந்தோஷமும் மிக முக்கியம்.என நினைப்பவர்.அவற்றை வெளியே தேடி பிரயோஜனம் இல்லை. நமக்குள்ளேயே-நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பது இவரது கொள்கை. அவ்வப்போதுதாய் தேவி தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு சிபாரிசு செய்வார். அவற்றுக்கு உதவுவதில் ஸ்வர்னாவுற்கு பெரும் மகிழ்ச்சி!

-என்.சி.மோகன்தாஸ்

பட மிக்ஸ்;ஹரிலக்ஷ்மன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us