சிங்கப்பூர் பல்துறை வித்தகர் மில்லிட் அஹமதுவுக்குப் புதுச்சேரி உலக சாதளை அமைப்பு நடத்திய முப்பெரும் விழாவில் – கின்னஸ் சாதனைப் புத்தகம் – சிங்கப்பூர் ஆசியா சாதனைப் புத்தகம் – கலாம் சாதனைப் புத்தகம் – மஜீலா சாதனைப் புத்தகம் முதலியவற்றில் இடம் பெற்றதற்காக டாக்டர் அப்துல் கலாம் வாழ்நாள் சாதைனையாளர் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விழாவில் ஏம்பலம் ஆர்.செல்வம் விருது வழங்கி கவுரவித்தார்.
சிங்கப்பூர் கோல்டன் மெர்லயன் விருதும் சிறந்த குறும்பட நடிகருக்கான சான்றிதழ்களும் மில்லட் அஹமதுவுக்கு சிங்கப்பூரில் அளிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. மற்றும் சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்திய கண்ணதாசன் விழாவில் அமரர் சுப.அருணாசலம் நினைவு சூழலுக்கு ஏற்ற பாடலுக்கு இரண்டாம் பரிசினை சிங்கப்பூர் மூத்த நாடாளு மன்றச் செயலாளர் எரிக் சுவா வழங்கினார்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.