அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை புரிந்துள்ள திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வரும், பொருளாதாரத்துறையின் துறைத் தலைவருமான முனைவர் பேராசிரியர் அல்ஹாஜ் பி.என்.பி. முஹம்மது சகாபுதீனுக்கு அய்மான் சங்கத்தின் சார்பாக வரவேற்பு நிகழ்ச்சி, அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி இல்லத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச்.எம். முஹம்மது ஜமாலுதீன் தலைமையேற்றார். இந்நிகழ்ச்சியை ஆடுதுறை இமாம் இ. ஷாஹுல் ஹமீது தாவூதி இறை வசனம் ஓதி துவங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 42 வருடங்களாக அய்மான் சங்கம் செய்து வரும் நற்பணிகளை சங்கத்தின் பொருளாளர் ஏ. முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி மற்றும் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பேராசிரியர் முனைவர் பி.என்.பி. முஹம்மது சகாபுதீனுடன் கலந்துரையாடலுக்கு பிறகு அய்மான் சங்கத்தின் சார்பாக பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் ஏ. அப்துல் ஹமீது , எடிசலாட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நவுசாத் அலி , ஷேக் சேக்பூத் மருத்துவ நகரத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் மேலாளர் நாகூர் அமீர் அலி, அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் மதுக்கூர் ஒய் எம் அப்துல்லா, பைத்துல்மால் பொதுச் செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன், துணைப் பொருளாளர் பசுபதி கோவில் சாதிக் பாட்சா, சங்கத்தின் உறுப்பினர்கள் எம். முஹம்மது யாசிர், எம். முஹம்மது அஸ்பர், லெப்பை தம்பி ஆகியோர் கலந்து கொண்டார்கள்
இறுதியாக அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஆவை ஏ.எஸ். முஹம்மது அன்சாரி நன்றியுரை வழங்க லால்பேட்டை மெளலவி ரஷீத் அஹ்மது ஜமாலி துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
- நமது செய்தியாளர் காஹிலா
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.