52ஆண்டுகள் பாரம்பரியமிக்க பிரான்சுத் தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் பாரீசில் நடைபெற்றது. கூட்டத்தில் பிரான்சுத் தமிழ்ச் சங்க தலைவராக தசரதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். துணைத்தலைவராக தளிஞ்சன் முருகையா, பொதுச்செயலாளராக கோகுலன் கருணாகரன், பொருளாளராக மொழிச்செல்வன், துணைச் செயலாளராக தெய்வ வரதராசன், துணைப் பொருளாளராக எலிசபெத் அமல்ராஜ், செய்தித்தொடர்பு மற்றும் இளைஞர் பிரிவு பொறுப்பாளராக ஜேஸ் தேர்வு செய்யப்பட்டனர். பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் 53வது ஆண்டு பொங்கல் விழாவினை ஜனவரி மாதம் 15-ஆம் தேதி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. மேலும், சங்கம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு தலைவர் தசரதன் நன்றி கூறினார்.
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.