மாலத்தீவுகள் குடியரசின் தலைநகரான மாலேயில் இந்திய-மாலத்தீவு நட்புச் சங்கம் இரத்த தான முகாமை நடத்தியது.
இந்தியா-மாலத்தீவு நட்புச் சங்கத்தின் 13வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், மாலத்தீவுக் குடியரசின் தலைநகரான மாலேயில் தோஸ்தி இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த சங்கம் மாலே மற்றும் மாலத்தீவின் பிற தீவுகளில் அவ்வப்போது பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தோஸ்தி இரத்த தான முகாமின் நோக்கம் தலசீமியா நோயாளிகளுக்கு தொடர்ந்து இரத்தம் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவளிப்பதாகும். மாலத்தீவு இரத்த சேவை மையத்தில் நடைபெற்ற இரத்த தான முகாமில் இந்திய மற்றும் மாலத்தீவு பொதுமக்கள் ஆர்வம் காட்டி இரத்த தானம் செய்தனர்.
மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் மாலத்தீவின் இரத்த சேவைகளுடன் இணைந்து இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்திய துணை தூதர் பூஜா இந்த ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார். நட்புறவுச் சங்கத் தலைவர் அஹமது அம்ஜத் மற்றும் மற்ற செயற்குழு உறுப்பினர்கள் இரத்த தான முகாமில் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் அபு ஹிபா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.