இந்தியா-மாலத்தீவுகளின் நட்பு சங்கம், 2023 புத்தாண்டைக் கொண்டாட இந்தியா-மாலத்தீவு நட்பு இரவை ஏற்பாடு செய்திருந்தது.
2023 ஆம் ஆண்டு புத்தாண்டை நட்பு இரவாக வரவேற்று கொண்டாட சமூக மையத்தில் 1 ஜனவரி 2023 அன்று இந்தியா-மாலத்தீவுகளின் நட்பு சங்கத்தால் ஒரு வண்ணமயமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. நடனங்கள். மாலத்தீவின் பிரபல மந்திரவாதி ஷரீஃப் மேஜிக் ஷோ, குஹி தீவைச் சேர்ந்த குல்ஹீ அன்ஹெனுங்கே ரூஹு குழுவினரால் கலாச்சார நடனம் நடைபெற்றன.
இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை டைரக்டர் ஜெனரல் அலி ஜாக்கி மாலையின் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார், இந்திய தாதரகம், இந்திய கலாச்சார மையம் மற்றும் பல அமைப்பு அதிகாரிகள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய நட்புச் சங்க்த் தலைவர் அஹ்மத் அம்ஜத், சங்கத்தின் செயல்பாடுகளுக்கு இந்திய தூதரகம், இந்திய கலாச்சார மையம், நட்புச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் தொடர்ச்சியான ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி தெரிவித்தார்.
இந்தியா மற்றும் மாலத்தீவு மக்களுக்கு இடையேயான உறவுகளையும் பிணைப்பையும் வலுப்படுத்துவதற்காக நிறுவப்பட்ட இந்த சங்கம் 14 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.
இந்திய மற்றும் மாலத்தீவு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த நட்பு இரவைக் கண்டு களித்து, இந்திய மாலத்தீவு நட்புறவு நீடித்து வாழ என்று வாழ்த்தினர்.
- நமது செய்தியாளர் அபு ஹிபா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.