ஜெர்மனியின் வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் தலைநகரமான வோல்ப்ஸ்புர்க் நகரில் பொங்கல் திருநாள் பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவினை வோல்ப்ஸ்புர்க் நகரில் இடம்பெயர்வு மற்றும் ஒருங்கிணைப்புக்கான குழுவின் தலைவர் பீட்டர் காசல் குத்துவிளக்கேற்றி, புது பானையில் அரிசியிட்டு பொங்கல் விழாவினை துவக்கி வைத்தார். தமிழ் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வோல்ப்ஸ்புர்க், ஹனோவேர, பிரான்ஸ்வெய்க் நகரங்களில் குடியிருக்கும் தமிழ் மக்கள் பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் தமிழ் சங்க மாணவர்கள், பல்வேறு நடன நிகழ்ச்சிகள், கட்டுரை, கவிதைகள் நாடகம் என இயல் இசை நாடகத் தமிழை அரங்கேற்றி தமிழ் விழாவான பொங்கலை சிறப்பித்தனர். விழாவின் இறுதியில் புதுப்பானையில் பொங்கலிட்ட இனிப்பு பொங்கல் மற்றும் வீட்டில் சமைக்கப்பட்ட பல்வேறு இந்திய உணவுகள் பரிமாறப்பட்டன. தமிழ் மக்கள் மட்டும் அல்லாது ஜெர்மன் மக்களும் விழாவினை கண்டு மகிழ்ந்தனர்.
பாரதி தமிழ் சங்கத்தில் தற்போது மூன்று முதல் 15 வயதுக்கு உட்பட்ட இருவதற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் தமிழ் பயின்று வருகின்றனர். இந்த தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் மொழி மட்டுமல்லாது தமிழ் கலாச்சாரம் சார்ந்த அனைத்து தமிழ் அம்சங்களும் கற்றுக்கொடுக்கப்படுகிறது .
- தினமலர் வாசகர் பிரேம்குமார் ரத்தனவேலு
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.