நைஜீரியாவில் 'தமிழர் திருநாள்' திருவிழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

நைஜீரியாவில் 'தமிழர் திருநாள்' திருவிழா

ஜனவரி 24,2023 

Comments

தமிழ் சங்கம் நைஜீரியா தைத்திருநாளை மிகவும் உற்சாகத்துடன் ஏற்பாடு செய்திருந்தனர். நைஜீரியாவின் தலைநகரமான அபுஜாவில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து வந்திருந்த உயர் ஆணையர் ஜி பாலசுப்பிரமணியன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்தார். மேலும் லேகோஸில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து ஆணையர்கள் சந்திரமௌலி குமார் கேர்ன் மற்றும் இரண்டாம் ஆணையர் அஜய் குமார் ஷர்மா தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

லேகோஸ் இலுபேஜுவில் உள்ள சமூக பூங்காவில் காலை 10 மணி அளவில் துவங்கி இந்த விழா, மண் மணம் மாறாத கிராமிய நிகழ்ச்சிகளை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. ஒருபுறம் மண் பானைகளில் பொங்கல் வைத்தல், கோலப்போட்டி என்று பெண்கள் தங்கள் சொந்த ஊருக்கே சென்ற நினைவுகளில் பூரித்தனர். முளைப்பாரி வளர்த்து அதை சுற்றி கும்மி அடித்து கொண்டாடினர்.

மறுபுறம் கடந்த இரு வார காலமாக பயிற்சி எடுத்துக் கொண்ட சிறுவர், சிறுமியர் கோலாட்டம், ஒயிலாட்டம், கரகம், காவடி போன்ற கிராமிய நடனங்களை இங்கே பிரமாதமாக வெளிப்படுத்தினர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி, உறியடி, வழுக்கு மரம் ஏறுதல், கோழி பிடித்தல் போன்ற விளையாட்டுக்களை சிறுவர்களும், ஆடவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நைஜீரியா தமிழ் சங்கத்தின் தமிழர் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளை இந்த விளையாட்டுக்களில் பொதுமக்கள் கலந்து கொள்வதன் மூலம் வெகுவாக ஆதரித்தனர். நிகழ்வுகளுக்கு இடையில் நீர் மோர், பானகம், கம்பங்கூழ் போன்ற பானங்களும் கொடுக்கப்பட்டது. மதிய உணவும் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் ஒரு தமிழக கிராம திருவிழாவில் கலந்து கொண்ட மனநிறைவோடு சென்றனர் என்றால் அது மிகையாகாது.

- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்


Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'

பிப்.,4 ல் 'ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்'...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில் பொங்கல் விழா...

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)

பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us