துபாய் : இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி. முரளிதீரன் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த சுற்றுப்பயணத்தின் போது அமீரக மந்திரிகளுடன் சந்திப்பு, துபாய் இந்திய பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியருடன் சந்திப்பு, இந்திய வர்த்தகர்களுடன் சந்திப்பு, பொங்கல் விழா மற்றும் இந்திய சமூகத்தினருடன் சந்திப்பு அஜ்மான் இந்திய சங்கத்தில் தொழிலாளர்களுக்கு உணவு வழங்குதல், துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்று பார்வையிடல், அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு சென்றது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி விபுல், துணை தூதர் டாக்டர் அமன்புரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
பொஸ்ரான் தமிழ்ச் சங்கம் நிர்வாகிகள் ( 2022- 2023)...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.