அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் உட்லண்ட்ஸ் நகரில் உள்ள உட்லண்ட்ஸ் தமிழ் பள்ளி இந்து கோயிலில் கடந்த ஜனவரி 22ம் தேதி ’பொங்கல் விழா’வை சிறப்பாக கொண்டாடியது. இவ்விழாவில், தமிழ் பள்ளி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக பானையில் பொங்கல் வைப்பதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.நடனம், நாட்டியம், கும்மி, ஆண்களுக்கான நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும், சிலம்பாட்டம், கரகாட்டம், உறியடி போன்ற பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றிருந்தது. அனைவரும் போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கானோருக்கு, தமிழர் பாரம்பரிய முறைப்படி, வாழை இலை விருந்து கொடுக்கப்பட்டது. தமிழர்கள் மட்டுமல்லாமல், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.