இந்தியாவின் 74வது குடியரசு தினம் இன்று ஜெத்தாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் இந்திய சமூகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக கலந்து கொண்டனர். இந்திய துணை தூதரக அதிகாரி முகமது. ஷாஹித் ஆலம் இந்தியக் கொடியை ஏற்றிவைத்து, சவுதி அரேபியாவில் வாழும் இந்தியர்களை வரவேற்று, குடியரசுத் தலைவரின் செய்தியை வாசித்தார்,
அதைத் தொடர்ந்து இந்தியப் பள்ளி மாணவர்கள் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. அதனை தொடர்ந்து ஜித்தா இந்திய பன்னாட்டு பள்ளியில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது. அங்கு பள்ளி மாணவ மாணவிகள் இந்திய கலாச்சாரத்தையும் சுதந்திர போராட்டத்தை நினைவு கூறும் வகையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வந்திருப்போர் அனைவரையும் பரவசமடைய வைத்தார்கள்.
- சிராஜ், ஜித்தா தமிழ்ச்சஙகம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.