துபாய் : துபாய் இந்திய துணை தூதரகத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் இந்திய துணை தூதர் டாக்டர் அமன்புரி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து இந்திய குடியரசுத் தலைவரின் குடியரசு தின உரையில் இருந்து முக்கிய பகுதிகளை பொதுமக்களுக்கு வாசித்தார். பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், துணைத் தூதரக அதிகாரி ராம்குமார் தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.