லேகோஸ், நைஜீரியா: லேகோஸ், நைஜீரியாவின் இந்திய துணை தூதரகத்தில் இந்திய குடியரசு தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலையில் தேசியக்கொடியை ஏற்றி விழாவை துவக்கி வைத்து, இந்திய ஜனாதிபதியின் உரையை வாசித்தார் துணை தூதரகத்தின் முதல் உயர் அதிகாரி சந்திரசேகர் கேர்ன். இதனைத் தொடர்ந்து இந்திய பள்ளியின் குழந்தைகள் பாடினர்.
இந்த நிகழ்வில் 17 மாநிலங்களின் சங்கங்கள் தங்கள் பகுதியின் சிறப்பு அம்சத்தை வெளிப்படுத்தும் விதமாக பணிமனையை அமைத்திருந்தார்கள். தமிழ் சங்கமும் இதில் முதல் முறை கலந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பணிமனைகள் மூலம் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தை உற்சாகத்துடன் கண்டு களித்தார் விழாவின் சிறப்பு விருந்தினர் நைஜீரியாவின் ஈடோ மாகாணத்தின் ஆளுநர் திரு காட்வின் ஒபேசகி. துணை தூதரகத்தின் சார்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தார்.
- நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா அனந்தன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.