குவைத் தமிழ் மக்கள் சேவை மையம் இந்திய 74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்த தான முகாம் குவைத் ஜெயபிரியா மத்திய ரத்த வங்கியில்நடத்திற்று.இதில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்வமுடன் கலந்துக்கொண்டனர். இவர்களில் ஏற்றதாக இருந்த 152 நபர்கள் இரத்த தானம் செய்தார்கள்.
குவைத் இந்திய தூதரக அதிகாரி முதல் செயலாளர், தொழில் அதிபர் மகா ஹைதர் குரூப் சேர்மன் டாக்டர். எம்ஏ ஹைதர் அலி, ஏர் இந்தியா கார்கோ மேனேஜர் ராஜேந்திரன் மற்றும் குவைத் தமிழ் மக்கள் சேவை மையத்தின் உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
இதற்கான ஏற்பாடு அனைத்தையும் அலிபாயுடன் நிர்வாகிகளான, தலைவர் அபுதாகிர் செயலாளர் ரசீது பொருளாளர் அம்ஜத் கான் ஒருங்கிணைப்பாளர் ராசிக்கு அஹமத் பாலு செல்வராஜ் மருத்துவ அணி செயலாளர் சித்தீக் இமாம் அலிபாய் சிறப்பாக செய்திருந்தனர்.
-குவைத்திலிருந்து ஹரி லக்ஷ்மணன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.