உணவு - உடை போல அழகு கலையும் கூட பெண்களுக்கு இன்று அத்தியாவசியமாகி யிருக்கிறது.நம்மூரில் என்றில்லை உலகம் முழுக்கவே!
மேக்கப் என்பது சினிமாவிற்கு மட்டும் என்றிருந்த நிலமை மாறி – தொலைக்காட்சி, விஷுவல் மீடியாக்கள் , சமூக வலைதளங்கள், வந்தபின் சகஜமாகி விட்டிருக்கிறது. பொது நிகழ்ச்சிகள் , விழாக்கள் , விசேஷங்கள் திருமணங்கள் என அனைத்துக்கும் மேக்கப் !
அது இன்று முக்கியமான தொழில் துறையாகவே மாறி, படித்த பெண்கள் பலரும் அதில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அப்படி அமெரிக்காவில் பசுமை அடித்திருக்கிறார் 'Rose Makeup Artistry LLC உரிமையாளரான ரோகிணி - இவர் பயோடெக் என்ஜினியர்!.
ரோகிணி மதுரை கே.புதூரை சேர்ந்தவர்.அப்பா சங்கரநாராயணன் ஏர்போர்ஸில் பணியாற்றினார். அம்மா பிரேமாகுமாரி நர்சரிஸ்கூல் நடத்தியிருக்கிறார்.
ரோகிணி கேந்திர வித்யாலயாவில் பள்ளிப் படிப்புக்குப் பிறகு விருதுநகர் காமராஜர் காலேஜ் ஆப்-இன்ஜினியரிங் -டெக்கில் பயோடெக் !
ரோகிணி ஓவியத் திறமை கொண்டவர். 2008 ல் டிகிரி முடித்த பின் ஹைதராபாத் மற்றும் பெங்களூரில் பணி புரிந்தாலும் கூட -சிறு வயதிலிருந்து மேக்கப் துறையில் ஆர்வம் இருந்துக் கொண்டிருந்தது. ஹைதிராபாத்தில் -Excell matrix biological deviceகம்பெனியில் 3 D cell culture, tissue Engineering டிஸ்யு மாற்று மெடிசின் ஆராய்ச்சியுடன் pharma : production executive வாக இருந்தார்.
திருமணத்திற்கு பிறகு 2012ல் அமெரிக்கா சென்ற போது PhD முடித்தால் தான் அங்கு வேலை என்கிற நிலை!அதில் மலைப்பாயிற்று. Basic & Bridal Bridal மேக்கப்; மேக்கப் Designory, USA ,மற்றும் ST-பியூட்டிஷியன் துறையில் இருந்த விருப்பத்தால் ESTHETICIAN-skin care professionals, Skin treatments கோர்ஸில் சேர்ந்து படித்தார்.
அமெரிக்காவில் பியூட்டிஷனுக்கு மட்டுமில்லை முடிவெட்டுக்கும்,டைஅடிக்கவும் (cosmetologist) கூட படித்தாகனும்.–எழுத்து மற்றும் பிரக்டிகல் பரீட்சை எழுதியாகனும்.அதில் 70% மார்க்கில் பாஸானால் தான் லைசன்ஸ் கிடைக்கும்.!அந்த ஒரு வருடப் படிப்புக்கு 25—35 லட்சரூபாய் வரை ஆகும்.
அதிலும் ரோஹிணி சருமம் சம்பந்தமாய் படித்து தனி பிராண்ட் வேணும் என்று ஸ்பெஷலாய் செய்திருக்கிறார்.துவக்கத்தில் நேரடி சேவையாய் வீடுகள் விசேஷங்கள் என சென்று வந்தார்.அதன் பின் Rose make up Artistyஎனும் கடையையும் Bridal studio & Salon ம் நடத்தி வருகிறார். இதன் துவக்க காலத்தில் ரோகிணியை பிரபலப்படுத்த புவனா தினேஷ் எனும் பெண் புகைப்படக்கலைஞர் மாடல் ஷுட் பண்ணி உதவினாராம்.
ஊரில் மேக்கப் என்பது எளிதானது.கொஞ்சம் பெயர் பெற்று விட்டால் அப்படியே சமாளித்து விடலாம்.அமெரிக்காவில் அப்படி முடியாது. அங்கு சட்ட திட்டம் அதிகம்.மேக்கப் பொருட்களினால் அலர்ஜி ஏற்பட்டால் பிரச்னை! ரோகிணி அந்த விஷயத்தில் ரொம்பவே உஷார்!மேக்கப்பிற்கு அழைப்பவர்களிடம் , புக்கிங் சமயத்திலேயே காண்ட்ராக்டில் தெளிவாய் கையெழுத்து பெற்று விடுகிறார்.எத்தனை மணி நேரம் - எவ்ளோ கட்டணம் எங்கே வரணும் என ஆரம்பித்து...மேக்கப் அலர்ஜிக்கு பொறுப்பேற்க முடியாது என்று இன்சூரன்ஸுக்கு வலியுறுத்துகிறார். அதற்கான இன்சூரன்சும் வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் மேக்கப்பிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள்.அத்தோடு நல்ல மரியாதையும்! அமெரிக்கர்கள், மெக்ஸிகன்களுக்கு, கருப்பு அமெரிகங்களுக்கு என்று தனித் தனி மேக்கப்! உள்ளூர் நபர்கள் இதற்கென இருந்தாலும் கூட ரோகிணியை விரும்பி அழைக்கிறார்கள்.ரோகிணி, தரமான அமெரிக்க கிரீம்களை தான் பயன்படுத்துகிறார். அவை - மழை - வெயில் குளிரால் பாதிக்கப்படுவதில்லையாம்.
அமெரிக்கா திருமணங்கள் மதியத்தில் நடக்கின்றன.அவர்கள் செலவு பற்றி கவலைப்படுவதில்லை. உடனே பணம் செலுத்தி விடுவர்.அமெரிக்கா வாழ் பெண்களுக்கு நகை நட்டு மேல் அத்தனை ஈடுபாடு இல்லை. எளிமையாய் தான் அணிகிறார்கள். அவர்களுக்கு ஹேர் ஸ்டைல் , மேக்கப் எல்லாம் செய்வது சுலபமாம்.
இந்திய பெண்களுக்கு அப்படி முடியாது. நகை,பூ, சேலையில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் அதிக சிரத்தை எடுக்க வேண்டும்.
நம் பெண்கள் மேக்கப்பிற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்களாம்.
திருமணம்- குடும்ப விசேஷங்கள் , விழாக்கள் , பார்ட்டிகள் என அனைவரும் மேக்கப்பிற்கு பழகி விட்டதால் அங்கு பியூட்டிஷியன்களுக்கு ஏக கிராக்கி
பயொடெக்என்ஜினியராக போயிருந்தால் கூட இத்தனைசம்பாதிக்க முடியாது, அதை விட அதிக வருமானம் ஈற்றுவதாக பெருமைப்படுகிறார். ரோகிணி.வேலை - வீடு என முடங்கி கிடப்பதை விட இதன் மூலம் வெளியே பலருடனும் பழகும் வாய்ப்பு அதிகம். நேரம் , காலம் பார்க்காமல் உழைக்க வேண்டும் என்றாலும் கூட பிடித்த விஷயத்தை தொழிலாக செய்வதில் இவருக்கு திருப்தி!
படித்து மற்றவர் போல் எட்டு மணி நேர வேலை- குடும்பம் என்று குறுகிய வட்டத்துக்குள் அடைந்து விடாமல் சுய விருப்பப்படி செயல்பட முடிவதற்கு முழு காரணம் கணவர் சுந்தர் சுப்பையா தான் என்று நெகிழ்கிறார்.
சுந்தர், திருச்சி அங்காளம்மனில் B.E (E&I) படித்து இன்ஃபோஸில் வேலை பார்த்தவர.பிறகு ஸ்காலர்ஷிப்பில் university of FLORIDA வில் MS (அதுவும் கம்ப்யூட்டர் csc மற்றும் ரொபோடிக்ஸ்) முடித்து நேஷனல் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்கம்பெனியின் R & D யில் பணிபுரிகிறார்.இவர்களுக்கு தீரன் , வானதி என இரு வாரிசுகள்.!
தமிழ் ஆர்வம் உள்ள சுந்தர் ஆஸ்டின் தமிழ் பள்ளியில் தன்னார்வல ஆசிரியராக சேவை செய்து வருகிறார். அமெரிக்கா தமிழ் அகடமியின் நல்லாசிரியர் விருதும் பெற்றிருக்கிறார். கடுமையான உழைப்பும் கணவரின் ஊக்கமும் தனக்கு பலம் என்கிறார் ரோகிணி. படிக்கும்போதே கபடி , கிரிக்கெட் , என ஆரம்பித்து ,யுனிவர்சிட்டியில் நேஷனல் பிளேயர் அளவுக்கு உயர்ந்தவர்.
அமெரிக்காவிலும் ATX women's cricket club நடத்துவதுடன் பெண்களுக்கு இலவசமாய் கோச்சிங்கும் தருகிறார்.மேக்கப் கலையையும் பிறருக்கு பயிற்றுவிக்கிறார்.
அத்துடன் IDIA (Inspiring Divas in Austin)எனும் NGO மூலம் பெண்களின் முன்னேற்றத்துக்கும் உதவி வருவது சிறப்பு.
-என்.சி.மோகன்தாஸ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.