சியாட்டில் கலை- தாளம் குழுவினர் பொங்கல் விழா கோலாகலம் | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

சியாட்டில் கலை- தாளம் குழுவினர் பொங்கல் விழா கோலாகலம்

பிப்ரவரி 02,2023 

Comments

மத - இன - நாடு – மொழி கடந்த தமிழினத்தின் தொன்மைப் பெருவிழாவான பொங்கல் திருவிழா நூறு குடும்பங்கள் – முன்னூறு தன்னார்வலர்கள் பங்கேற்ற கோலாகல விழாவாக சியாட்டில் ஜனவரி 15 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது. நவாலிட்டி ஹில் பார்ம் – துவல் வாஷிங்டன் தலைவர் ஜெயகுமார் கிருஷ்ணன் தலைமை ஏற்றார். இந்த ஊருணிப் பொங்கல் – பட்டிப் பொங்கல் விழா தமிழர்தம் பாரம்பரிய கலை விழாவாகவும் மிளிர்ந்தது.

வட்டமிட்டுப் பட்டாடை அணிந்த மகளிர் வளைக் கரங்கள் தாமொலிக்க கொட்டி இசைத்திட்ட கூட்டமுதப் பாட்டு பார்வையாளர்களைத் தம் வசப்படுத்தியது. இளசுகள் உற்சாகமாகக் கலந்து கொண்ட உரியடி மெய் சிலிர்க்க வைத்தது. சிறுமியரின் பந்து மாற்றல் விளையாட்டு கலந்து கொண்டோரைக் களிப்பில் ஆழ்த்தியது. வரை படத்தில் ஏற்ற இடத்தில் பொட்டு வைக்கும் போட்டியில் சிரிப்பொலி களை கட்டியது.

பறை இசைக்கு நடனமாடி பாரம்பரியத்தைக் காத்தவரைக் கரமதிர்த்து வரவேற்றமை அரங்கை அதிர வைத்தது. மா விளக்கு வழிபாடு பக்தி ரசம் பொங்க வைத்தது. சுருங்கக் கூறின் வெளி நாட்டில் வாழ்வதையே மறந்து தமிழர்தம் திருவிழாவைக் கொண்டாடியது மட்டுமல்ல தலை வாழை இலை பெய்து அறுசுவை விருந்து படைத்தது முத்தாய்ப்பாக அமைந்தது.

13 ஆவது ஆண்டு நிகழ்வாக இவ்விழா நடைபெறுவது குறிப்பிடத்தகுந்ததாகும்.

- தினமலர் வாசகர் சிவ குமார்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மா்ச் 18 ல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4

மா்ச் 18 ல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4...

கோதாவரி, தம்பா

கோதாவரி, தம்பா...

சாம்பியா தமிழ் சங்க நிர்வாகிகள் 2023-2024

சாம்பியா தமிழ் சங்க நிர்வாகிகள் 2023-2024...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us