வடமெரிக்கா,ஜார்ஜியா மகாணத்திலுள்ள அட்லாண்டாவில் ஶ்ரீ தியாகராஜ ஆராதனை நடைபெற்றது..அட்லாண்டா பைன் ஆர்ட்ஸ் திரு.சேலம் ஶ்ரீராம் மற்றும் ப்ரசாந்த் கிருஷ்ணமூர்த்தி முன்னின்று இவ்வைபவத்தை நடத்தினார்கள். அட்லாண்டாவில் இருக்கும் கர்நாடக இசை ப்ரியர்களுக்காக போன வாரம்இங்குஉள்ள ஸெஸ்ட்ன் ஹால், கம்மிங்கில் மதியம் முன்று மணி முதல் ஐந்து மணிவரை நடைபெற்றது.
முதலில் ஶ்ரீ தியாகராஜ படம்,மற்றும் ஶ்ரீ ராமருக்கு அர்ச்சனை தொடங்கி, பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட தொடங்கினார்கள்.இங்குள்ள கர்நாடக பாடகர்கள்,மிருதங்க வித்துவான்கள்,வயலின் மற்றும் புல்லாங்குழல் வாசிப்பவர்கள் ஒன்றாக இணைத்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட ரசிகர்கள் அனுபவித்து கேட்டு மகிழ்ந்தார்கள். வருடந்தோறும் திருவையாரில் நடக்கும் இந்நிமழ்ச்சியை கேட்டு ரசிக்க முடியாதவர்கள் இங்கு நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனைகளை கேட்டு மகிழ்ந்தனர். இந்த அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களை பாராட்டி வாழ்த்தி சென்றனர்.
- தினமலர் வாசகி பத்மா மணியன்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.