ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

ஆக்லாந்தில் தைப்பூசம் திருவிழா

பிப்ரவரி 08,2023 

Comments

ஆக்லாந்தில் உள்ள ஆஸ்திக பக்த சங்கீர்த்தன சமாஜத்தின் சார்பில் தைப்பூசம் திருவிழா சென்ற மாதம்27ஆம் தேதியன்று முருகனுக்கு பலவித அபிஷேகத்துடன் ஆரம்பித்து பக்தர்களுக்கு காவடி மற்றும் பால்குடம் நேர்த்திகடன் செய்பவர்களுக்கு கங்கணம் கட்டும் வைபவத்துடன் ஒனேஹங்காவில் உள்ள சாந்தி நிவாசில் தொடங்கி வைக்கப்பட்டது.

தைப்பூசத்திருநாளன்று காலை 9 மணியளவில் பக்தர்கள் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை பால் காவடி, புஷ்பக்காவடி மற்றும் பால்குடத்துடன் பக்தியுடன் எடுத்து வந்தார்கள். பிறகு முருகனுக்கு பால், தயிர், தேன், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகம் செய்த போது ருத்ர ஜபம் செய்து முருகனை துதித்தார்கள். பிறகு பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், கந்தசஷ்டி கவசம் துதித்தும் முருகனை துதித்தும் இசைத்தும் போற்றினர். சுமார் 200க்கும் மேலே பக்தர்கள் திரண்டு 'முருகனுக்கு அரோஹரா ' என்ற கோஷம் செய்தது விண்ணை பிளந்தது என்றால் மிகையாகாது.

பெரும்பாலான பக்தர்கள் சவுத் ஆப்ரிக்கா மற்றும் பிஜி தீவை சேர்ந்தவர்கள். அவர்களில் சில பக்தர்கள் உடம்பெல்லாம் அலகு குத்திக்கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினார்கள். சிலர் மாவிளக்கேற்றி தங்கள் பிரார்த்தனையை முடித்தார்கள். அர்ச்சனை மற்றும் பலவித ஆர்த்திகள் காண்பித்தும் முருகன் வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெற்றது. அடாது வானம் மழை பொழிந்தாலும் பக்தர்கள் அனைவரும் அதை பொருட்படுத்தாது இந்த ஆவடி திருவிழாவாம் தைப்பூச திருநாளில் கலந்துகொண்டு முருகனருளை பெற்றனர். பக்தர்கள் அனைவரும் நெஞ்சுருக வேண்டி முருகனின் அருளை பெற்றனர். நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பான மகா பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு முருகன் அருளை பெற்றனர்.

- நமது செய்தியாளர் சந்திரா சங்கரன்




Advertisement
மேலும் ஆஸ்திரேலியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மா்ச் 18 ல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4

மா்ச் 18 ல் வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4...

கோதாவரி, தம்பா

கோதாவரி, தம்பா...

சாம்பியா தமிழ் சங்க நிர்வாகிகள் 2023-2024

சாம்பியா தமிழ் சங்க நிர்வாகிகள் 2023-2024...

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்

தான்சானியா தமிழ் சங்க (2023-2024) நிர்வாகிகள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us