சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் சார்பாக ஜனவரி 29 அன்று லூசாகாவில் உள்ள ஹிண்டு அரங்கத்தில் வைத்து பொங்கல் மற்றும் ஆண்டு செயற்குழு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது .
பெரும் வாரியான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர், அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பொங்கல் சமைக்கும் போட்டி, சிறுவர்களுக்கான போட்டிகள் மற்றும் பெரியவர்களுக்கான போட்டிகள் என விழா களை காட்டியது.
அதன் பின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆண்டு செயற் கூட்டமும் நடந்தேறியது.
முடிவுறும் நிர்வாக குழுவின் தலைவர் சித்தார்த் ஐயர் கடந்த ஆண்டில் நிகழ்ச்சிகளை செவ்வனே நடைபெற உதவி புரிந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். ராஜகோபால் இடைக்கால தலைவராக இருந்து 2023 ஆண்டுக்கான செயற் குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.