ஷார்ஜா : ஷார்ஜாவில் புற்றுநோய் நண்பர்கள் அமைப்பின் சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் குதிரைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி குதிரைகளில் தன்னார்வலர்கள் நகரின் முக்கிய இடங்களுக்கு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த விழிப்புணர்வு முகாமின் ஒரு பகுதியாக இலவச மருத்துவ பரிசோதனையும் நடந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
இந்த முகாம் துபாய், அஜ்மான் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடக்கிறது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- நமது செய்தியாளர் காஹிலா
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.