சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேகம் மார்ச் 18 ஆம் தேதி சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலை எட்டு மணிக்கு விசேஷ யாக பூஜையுடன் விழா தொடங்கியது. ஒன்பது மணிக்கு ஸ்ரீதேவி – பூதேவி சமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேசப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெற்று பூர்ணாஹீதி தொடர்ந்தது.
9.45 மணிக்கு யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் – பக்தர்களின் “ ஓம் நமோ நாராயணா...ஓம் நமோ வேங்கடேசா ... ஓம் நமோ பகவதே வாசுதேவாயா ...” என்ற முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. சரியாகப் பத்து மணிக்கு மகா தீபாராதனையும் பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதமும் வழங்கப்பட்டன.
மாலையில் சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீதேவி – பூதேவி சமேதராக ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் விழா ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.