சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மார்ச் 12 முதல் 18 வரை கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகத்தின் ஒரு பகுதியாக 17 ஆம் தேதி அன்னையின் அகங் குளிர வஸ்த்ர சமர்ப்பண வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஆலயம் முழுவதும் சுமங்கலி மகளிர் நிரம்பி வழிய அன்னை ஸ்ரீ காளிகாம்பாவுக்கு 108 ஆடை சமர்ப்பணம் சாட்சாத் சக்தி தேவியே நேரிற் காட்சி தந்ததைப் போல – நெஞ்சிற் கவலைகள் – நோவுகள் யாவையும் நீக்கிக் கொடுப்பவளை – உயிர் நீளத் தருபவளை – ஒளிர் நேர்மைப் பெருங் கனலை – நித்தம் அஞ்சேல்...அஞ்சேல் என்று கூறி நமக்கு நல்லாண்மை சமைப்பவளை – பல வெற்றிகள் ஆக்கிக் கொடுப்பவளைப் பெருந் திரள் ஆகிப் பணிந்திடுவோம் வாரீர் என்ற வண்ணம் பல்வண்ண ஆடை சமர்த்திட “ மங்கையராகப் பிறந்ததற்கே மாபெரும் தவம் செய்தோம் அம்மா “ எனத் திரண்ட பெருந்திரள் சுமங்கலியர் மத்தியில் தலைமை அர்ச்சகர் கணேஷ் குமார் சிவாச்சார்யார் வஸ்த்ர சமர்ப்பண மகிமையை விளக்கிய போது “ ஓம் சக்தி ...பராசக்தி “ சரண கோஷம் விண்ணை எட்டியது. வான வில்லின் வண்ணத்தையும் விஞ்சும் வண்ணம் அடடா ! வண்ணப் பெருங்கடல் ஆலயத்தில் நுழைந்து விட்டது.
சர்வ அலங்கார நாயகியாக எழுந்தருளி அருள்பாலிக்க மகா தீபாராதனை கண்குளிர நடைபெற்றது. மங்கள நாண் நிலைக்கவும் குடும்பத்தில் சகலவித சௌபாக்கியங்களும் வளரவும் அருட் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.