ஜெர்மனியில் உள்ள ஓபர்ஹௌசன் நகரில் 'இளையராஜா 80 லைவ்' என்ற இசை நிகழ்ச்சி வருகிற ஜூலை 1-ம் தேதி நடைபெற உள்ளது. திரை உலகில் மிக பிரபலமான பல பின்னணி பாடகர் மற்றும் பாடகிகள் வந்து சிறப்பிக்க உள்ளனர்.
இளையராஜா பாடலுக்கான ரசிகர் வட்டம் மிகப்பெரியது. பயணம் செய்யும்போதோ அல்லது இரவில் தூங்குவதற்கு முன்பாகவோ அந்த நாளில் ஒரு தடவையாவது இளையராஜா பாடலை கேட்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. தன்னுடைய இசை வசியத்தால் தனக்கென மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி நம் அனைவரையுமே அதற்குள் கட்டி போட்டவர் இளையராஜா.
ஐரோப்பாவில் வாழும், அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் வாழும் இந்தியர்களுக்கு இளையராஜாவை நேரில் பார்த்து அவரின் பாடல்களை ரசிக்க வாய்த்த மிகப்பெரிய சந்தர்ப்பம் இது! நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை மூன்று விதமாக பிரித்திருக்கிறார்கள். அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு இசைஞானி ஸோன் - 150 யூரோ என்றும், அதற்கடுத்ததை மேஸ்ட்ரோ ஸோன் -99 யூரோ என்றும், கடைசியாக ராஜா ஸோன் - 55 யூரோ என்றும் பிரித்திருக்கிறார்கள். ஒரு யூரோ என்பது நம்மூர் பணத்துக்கு ஏறத்தாழ 89 ரூபாய்.
ஜெர்மனிக்கு வருகை தரும் பின்னணி பாடகர்களின் விபரம்:- ஸ்வேதா மோகன், கார்த்திக், மனோ, மதுபாலகிருஷ்ணன், எஸ். பி.சரண், சுர்முகி ராமன், அனிதா கார்த்திகேயன், விஜய் டிவி புகழ் சிரிஷா விஜயசேகர், நாராயணன் ரவிசங்கர், முகேஷ் முஹமது, பிரியா ஹிமேஷ், விபாவரி ஆப்தே ஜோஷி, செண்பகராஜ், சிரீஷா பகவத்துலா, மற்றும் சரத் சந்தோஷ்.
கண்டிப்பாக ஜூலை ஒன்றாம் தேதி ஜெர்மெனி களைகட்டும், இசை மழை கொட்டும்!
-நமது செய்தியாளர் ஜேஸூ ஞானராஜ்
தார்சலாம் சுப்ரமணிய சுவாமி, விநாயகர் கோயிலில் வைகாசி விசாகம்...
முருகக்கடவுளின் வைகாசி விசாகமும் கௌதமபுத்தரின் விசாக பூஜையும்...
துபாயில் ‘மதுரை சுல்தானியர் காசுகள்’ நூல் அறிமுகம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.