துபாயில் 308 கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கு கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சி!! | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

துபாயில் 308 கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கு கொண்ட பிரமாண்ட நிகழ்ச்சி!!

மே 24,2023 

Comments

துபாய் : துபாய் நகரின் ஊத் மேத்தா பகுதியில் உள்ளது இந்திய பள்ளிக்கூடம். இந்த பள்ளிக்கூடத்தின் ஷேக் ராஷித் அரங்கில் அமீரகத்தில் கர்நாடக இசையை பயிற்றுவிக்கும் மோஹனா குழுவினரின் குருவந்தனம் நிகழ்ச்சி வெகு சிறப்புடன் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து கர்நாடக இசைக் கலைஞர்கள் சங்கீத கலாநிதி டாக்டர் சவுமியா, வயலின் வித்வான் கலைமாமணி எம்பார் கண்ணன், மிருதங்க வித்வான் நெய்வேலி நாராயணன் மூவரும் இணைந்து கச்சேரி வழங்கி ரசிகர்களை இசை வெள்ளத்தில் ஆழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 308 இசைப் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர் ஒரே மேடையில் பச்சை வண்ண உடையணிந்து, இந்திய தேசியக் கவி எனப் போற்றப்படும் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 17 பாடல்களை பாடியது கண் கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது. அமீரகத்தில் பாரதியாரின் பாடல்களை இசையுடன் வழங்கியது பலரது வரவேற்பையும் பெற்றது.

கொரோனா பாதிப்பின் காரணமாக 3 வருடங்களாக தடைப்பட்டிருந்த நிகழ்ச்சியை ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ எனும் கருத்தாக்கத்தில், கனவை நனவாக்கினர். ராதிகா ஆனந்த் அவர்களின் மேற்பார்வையில், 20 க்கும் மேற்பட்ட இசை ஆசிரியர்கள், தீபா வினய், ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோரது ஒருங்கிணைப்பில் சிறப்புடன் இசை நிகழ்ச்சியை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புடன் செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று பகுதிகள் ஜனவரி மாதம் பாரதியார் மிகவும் விரும்பிய ஜதி பல்லக்கில், துபாயில் சிறு வீதி உலா வந்ததும், அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் இரு நிகழ்வுகளாக பாரதியாரின் வாழ்க்கையையும், அவரது படைப்புகளையும் பேச்சு, பாடல், நடனம், நாட்டியம், நாடகம், என அவரை கொண்டாடியதும் குறிப்பிடத்தக்கது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.

அமீரக இசை ரசிகர்களின் பேரன்பும், அணுசரணையாளர்களின் ஆதரவும், தன்னார்வலர் குழுவின் தன்னலமில்லா உழைப்புமே இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்தது என குழு உறுப்பினர் ரமா மலர் தெரிவித்தார்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்து மகிழ்ந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா


Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மே 6ல் சிகாகோ தமிழ்ச் சங்கம் - சிறப்புப் பட்டிமன்றம்

மே 6ல் சிகாகோ தமிழ்ச் சங்கம் - சிறப்புப் பட்டிமன்றம்...

ஜூலை 1ல் ஜெர்மனியில் இளையராஜாவின் இசை மழை!

ஜூலை 1ல் ஜெர்மனியில் இளையராஜாவின் இசை மழை!...

தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்

தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...

கோதாவரி, தம்பா

கோதாவரி, தம்பா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us