இலங்கை நல்லூர் சிவன் ஆலய அம்மன் வாசல் கொடியேற்ற வைபவம் சிறப்பாக நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வின் சிறப்பம்சமாக, கொடியேற்ற நிகழ்வின் பின் இடம் பெற்ற நவசந்தி பூஜைகளில் ஆகமங்கள் குறிப்பிட்டவாறு அந்தந்த சந்திகளில் அவற்றுக்குண்டான நிருத்த உபசாரமும் இடம்பெற்றது.
யாழ் பல்கலைக்கழக சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புல கலைகள் பீட, நடனத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சீதாலக்ஷ்மி பிரபாகரன் தனது ஆய்வின் பெறுபேறாக, ஆகமம் குறிப்பிட்டவாறு நிருத்த உபசாரத்தை ஆலயங்களில் இடம்பெறச் செய்வதற்கான ஒரு முன்முயற்சியாக, இந்த நிருத்த உபசாரத்தை நல்லூர் சிவன் ஆலய அம்மன் வாசல் மஹோற்சவ ஆரம்ப நாளாகிய இன்றைய கொடியேற்ற நிகழ்வில் ஏற்பாடு செய்திருந்தார்.
சீதாலக்ஷ்மி பிரபாகரனது வழிகாட்டலில், நீர்வையூர் பொன் சக்தி கலாகேந்திரா இயக்குனர் சத்தியப்பிரியா கஜேந்திரனுடைய நெறியாள்கையில், அவர்களது மாணவர்களால் மேற்படி நிருத்த உபசார ஆற்றுகை இடம்பெற்றது.
நடன நெறியாள்கை, நட்டுவாங்கம் - சத்தியப்பிரியா கஜேந்திரன், குரலிசை - மதுராங்கி நிஷாந்தன், மிருதங்கம் – கணபதிப்பிள்ளை கஜன், வயலின்- இராசரட்ணம் நிரோஜன்.
இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான முயற்சி முன்னெடுக்கப்பட்டமை, கலைஞர்களிடமும், சிவாச்சாரியார்களிடமும், அடியவர்களிடமும் சிறந்த வரவேற்பை பெற்றது.
இனிவரும் காலங்களில் நிருத்த உபசாரத்தை ஏனைய ஆலயங்களிலும் இவ்வாறு நடைமுறைப்படுத்துவதற்கு இம்முயற்சி ஓர் நல்ல ஆரம்பமாக அமையட்டும்.
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.