2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் யோகா தினம் தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. யோகா என்பது பண்டைய இந்தியாவில் உருவான, உடல் மற்றும் மனத்தை இணைக்கும் ஆன்மீகப் பயிற்சியாகும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2014 ஆம் ஆண்டு தனது ஐ.நா உரையில், ஜூன் 21 ஆம் தேதியை யோகா தினமாகக் கொண்டாடப்பட பரிந்துரைத்தார், ஏனெனில் இது வடக்கு அரைக்கோளத்தில், ஆண்டின் மிக நீண்ட நாளாக இருப்பதால், உலகின் பல பகுதிகளில் ஒரு சிறப்பு முக்கியத்துவத்தைப் பகிர்ந்து கொள்கிறது. யோகாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்து, உடல் மற்றும் ஆன்மீக வலிமையை ஊக்குவிக்க, சர்வதேச யோகா தினம் கொண்டாடுகிறது. இது உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான செயல்பாட்டின் முக்கிய ஆதாரமாக இருப்பதால், தினமும் மில்லியன் கணக்கானவர்கள் கலந்துகொண்டு யோகாப் பயிற்சி செய்கிறார்கள். இந்த நடைமுறைகள் பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் உடல், மனம் மற்றும் ஆன்மாவை இணைக்கும் ஒரு வழியாகும்.
வரும் ஜுன் மாதம் 18 ம் தேதியன்று , காலை 6.30 மணியில் இருந்து 7.30 மணி வரை, 9 ம் ஆண்டு உலக யோகா தினம், பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகம் சார்பில், கிங் சூலா லங்கோன் பல்கலைக்கழக மைதானத்தில் கொண்டாடப்பட உள்ளது. கலந்து கொள்பவர்களுக்கு இலவச டீ சர்ட் மற்றும் தண்ணீர் பாட்டில் வழங்கப்பட உள்ளது. கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைப்பில் முன் பதிவு செய்யுமாறு பாங்காக் இந்தியத் தூதரகம் சார்பில் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
தாய்லாந்தில் இந்துக் கோவில்கள் மற்றும் முகவரிகள்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.