சுவாமி விவேகானந்தரை தெரியாதவர் இருக்கமுடியாது, இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுதும் அறியப்பட்டவர். அவர்.ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அவர்களை, தன்னுடைய 18 வது வயதில் குருவாக ஏற்றுக் கொண்டார். அவரின் பெயரில் ஸ்ரீராமகிருஷ்ணா மடங்கள் உலகெங்கும் பல இடங்களில் நிறுவப்பட்டு, ஆன்மிகம் மற்றும் சிறப்பான வாழ்க்கை சம்பந்தமான உபன்யாசங்கள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், இந்து மதம் மட்டுமல்லாது, இஸ்லாம், கிறித்துவம் போன்ற பிற மதங்களிலும் அவர் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார், ஏனெனில் அனைத்து மதங்களின் நல்ல கருத்துக்களும் பொதுவானவை என்று அவர் உணர்ந்தார். அவற்றை அவர் நடைமுறைப்படுத்தியதால், உலகெங்கிலும் அவரை பின்பற்றுபவர்கள் இருந்தனர்.
பாங்காக்கில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண வேதாந்த நிலையம் சார்பில் 30/5/23 செவ்வாய் கிழமை, சுகும்வித் சாய் 33ல் உள்ள DS Tower 1 ல், அதன் சிங்கப்பூர் மடத் தலைவரான சுவாமி சச்சிதானந்தா சுவாமிகள் சுமார் ஒரு மணி நேரம் சொற்பொழிவாற்றினர். மேலும் குழந்தைகள் சிலரும் ஆன்மிகப் பாடல்கள் பாடி நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.