தாய்லாந்துக்கும் தமிழகத்துக்கும் உள்ள பல்வேறு வரலாற்றுத் தொடர்புகளில் ஆன்மிகத் தொடர்பானவை ஏராளம். அந்த வகையில் தமிழ் கடவுளான முருகனின் பிறந்த நாள், வைகாசி விசாகத்தன்றே, கௌதமபுத்தரின் பிறந்த நாளாகவும் அனுசரிக்கப்பட்டு, விசாக பூஜாவாக தாய்லாந்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தாய்லாந்து நாட்டில், இவ்விழாவுக்காக அரசு விடுமுறை அளிக்கப்படுவது இவ்விழாவின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.மேலும் இவ்விழாவன்று 24 மணி நேரத்திற்கு, மதுபான விற்பனை மற்றும் மதுபானம் பரிமாறும் கேளிக்கை விடுதிகளை தடை செய்துள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் 3/6/2023 சனிக்கிழமை அன்று பௌர்ணமியுடன் இணைந்து வந்த விசாக பூஜையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மாலை வேளையில் நடைபெற்றது. ஆகம விதிப்படி வேள்விகள் நடத்தி,வேதங்கள் இசைக்கப்பட்டு, மகா மாரியம்மன் மற்றும் முருகன் உற்சவர் சிலைகள் ஊர்வலமாக கோவிலுக்குள் 3 சுற்று சுற்றி வரப்பட்டு, மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்த நிகழ்ச்சி இரவு 10. 30 மணிக்கு நிறைவு பெற்றது.
உள்ளூர் தாய்மக்கள் பெருமளவு கலந்து கொண்டு, இறுதி வரை இருந்து மகா மாரியம்மன் மற்றும் முருகக்கடவுளின் அருள்கடாட்சம் பெறுவதை பெரும் பாக்கியமாக கருதினர்.
- நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.