தார்சலாம், தான்சானியா : தார்சலாம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் வைகாசி விசாகம் பூஜை ஜூன் 04, 2023 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், என பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர். பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!! என்ற முழக்கத்துடன் வீதியில் கோலாகலமாக உலா வந்தது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
மதியம் 12.15 மணி அளவில் ஆரத்தி காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. திருக்கோயிலின் நிர்வாகிகள்: பாலசுப்பிரமணியம், கார்த்திகேயன், கணேசன் பிச்சுமணி, பிரகாஷ், வாசு துருவன், சங்கர், காளிதாஸ், சேனாதிபதி, தனசேகர் ஆகியோரின் விழா ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக செய்யப்பட்டிருந்தன.
- தரிசலாமில் இருந்து தானேஷ் ராஜா
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.