திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர் ஜூன் மாதம் நான்காம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்தனர். இந்நிகழ்வில் ரோட்டராக்ட் கழகத்தின் தலைவர் அஜந்திக்கா, செயற்திட்ட தலைவர் அபிநயா ரகுராம் ஆகியோருடன் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர். ஜகத் விக்ரமரத்ன, ரோட்டரி கழகத்தின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் கிழக்கு மாகாண பிரதேச முகாமையாளர் க. பிரபாகரன் இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண சந்தைப்படுத்தல் அதிகாரி ந. து. ரகுராம் கலந்து சிறப்பித்திருந்தனர். செய்தித்தாள்களில் சக்கர நாற்காலிகள் தேவை குறித்த செய்தியின் அடிப்படையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் மேற்கொள்ளப்பட்டது
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.