பிரிஸ்பேன், லலிதகலாலயா நாட்டியப்பள்ளி மாணவ-மாணவியர்களின் சலங்கை பூஜை, சமீபத்தில் மவுண்ட் க்ராவட் பகுதியிலுள்ள க்ளாவொ மெக்கில்லாப் பள்ளி கலையரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறை வழிபாடுகளுக்குப் பின்னர், மாணவ-மாணவியர்களின் பெற்றோர்கள் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி துவங்கியது.
இசைக்குழுவினரின் நேரடி இசையில் நாட்டியப்பள்ளியின் மாணவ - மாணவியர் சிறப்பாக ஆடி தமது திறமைகளை வெளிக்காட்டினர். நாட்டியப்பள்ளியின் ஆசிரியை பத்மலட்சுமி ஶ்ரீராம் நட்டுவாங்கத்தில், சுஷ்மிதா ரவி வாய்ப்பாட்டு பாடினார். பக்க வாத்தியத்தில் அஸ்வின் நாராயணன் வயலினும், பாலராம் இராமகிரி மிருதங்கமும், முரளீதரன் இராமகிருஷ்ணன் புல்லாங்குழலும் வாசித்தனர்.
நிகழ்ச்சியில் இடம்பெற்ற நடனங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன. ‘பொம்ம பொம்மதா தைய தைய’ பாடலுக்கு, பின்னல் கோலாட்டம் ஆடிய நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியை சிவானி ஶ்ரீராம் தொகுத்து வழங்கினார்.
இலண்டனிலிருந்து இயங்கி வரும் க்ரிஃபின் கல்லூரி நாட்டிய தேர்வுகளில் பங்குபெற்ற லலிதகலாலயாவின் அனைத்து மாணவ-மாணவியர்களும் மிகச் சிறப்பாக வெற்றி பெற்றதை பாராட்டிப் பேசி, அவர்களுக்கான சான்றிதழ்களை, நாட்டியப்பள்ளியின் ஆசிரியை பத்மலட்சுமி ஶ்ரீராம் வழங்கினார்.
- நமது செய்தியாளர் ஆ சோ ரெங்கநாதன்
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.