அபுதாபி : அபுதாபியில் மௌலித் கமிட்டியின் சார்பில் மீலாதுப் பெருவிழாவையொட்டி மௌலித் ஷரீப் மற்றும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 15.09.2023 முதல் தொடங்கியது. இந்த விழா அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் வரும் 26 ந் தேதி வரை இரவு 7.45 மணி முதல் 9.45 மணி வரை தினமும் நடக்கிறது.
இதில் சென்னை, அல் அஸ்ரார் மாத இதழின் ஆசிரியர் டி.எஸ்.ஏ. அபுதாஹிர் ஆலிம் ஃபஹீமி மஹ்ழரி ஃபாஜில் ஜமாலி சிறப்பு பேச்சாளராக பங்கேற்று சொற்பொழிவு நிகழ்த்தி வருகிறார். நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக தினமும் விளக்கி கூறி வருகிறார். மேலும் தாயகத்தில் இருந்து தேரிழந்தூர் தாஜுதீன் பங்கேற்று இஸ்லாமிய வரலாற்றை நினைவு கூறும் பாடல்களை பாடி வருகிறார்.
இந்த விழாவையொட்டி தினமும் கேள்வி பதில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை மௌலித் கமிட்டியின் காயல் ஹுசைன் மக்கி ஆலிம் சிறப்புடன் செய்து வருகிறார். விழாவில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர். தினமும் நடந்து வரும் இந்த நிகழ்வில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- நமது செய்தியாளர் காஹிலா
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.