டி.ஆர்.டி தமிழ்ஒலி என்ற பெயரில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து முதல்முதலில் 1997ம் ஆண்டு தைப் பொங்கல் நாளன்று ஆரம்பிக்கப்பட்ட டி.ஆர்.டி வானொலி 2000ம் ஆண்டுவரை மிகச்சிறப்பாக இயங்கிவந்தது. 2000ம் ஆண்டு இந்த வானொலியை அரசியல் இயக்கம் ஒன்றுடன் இணைக்க வானொலியை நடத்திய ரேடியோ ஆசியா நிறுவனம் முடிவுசெய்தது. அப்போது, அதன் உருவாக்கத்திற்கு வித்திட்டவரும், ரேடியோ ஆசியா நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றிவந்தவருமான மூத்த பத்திரிகையாளர் எஸ்.எஸ். குகநாதன் அவர்கள் ரேடியோ ஆசியா நிறுவனத்திலிருந்து வெளியேறி, டான் நெட்வொர்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அந்த நிறுவனத்தின்மூலம் டி.ஆர்.டி தமிழ் அலை வானொலியை ஆரம்பித்தார். 2000ம் ஆண்டு நத்தார் தினத்திலிருந்து டி.ஆர்.டி தமிழ்அலை என்ற பெயரில் அதே வானொலி தொடர்ந்து ஒலிபரப்பாகிவருகின்றது. டான் ரெலிவிசன் நிறுவனம் இப்போது டான் தமிழ்ஒளி என்ற பெயரில் தமிழ்த் தொலைக்காட்சி சேவையையும் டான் தமிழ்ஒலி என்ற பெயரில் வானொலி சேவையையும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து ஒலி-ஒளிபரப்பிவருகின்றது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து டி.ஆர்.டி தமிழ்அலை வானொலியை தொடர்ந்து நடத்திவருகின்றது.
டி.ஆர்.டி. வானொலியை ஆன்லைனில் கேட்க : www.trttamilalai.com
சர்வதேச அரங்கில் இந்திய நாட்டுப்புற ஓவியக்கலைகள்...
உள்ளம் உருகிய அன்னையர் தின கலந்துரையாடல் நிகழ்ச்சி...
அபுதாபியில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க ஆலோசனைக் கூட்டம்...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.