ஹாங்காங்: ஹாங்காங்கில் உள்ள இந்திய இஸ்லாமிய ஜமாத் அமைப்பின் 30ம் ஆண்டு பொதுக்கூட்டம் கவ்லூன் மசூதியின் கலாச்சார அரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.அப்துல் ஹமீதின் குர்-ஆன் வாசிப்புடன் நிகழ்ச்சி துவங்கியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு பொதுக்கூட்டம் பற்றிய விவாதங்கள் நடைபெற்றது. ஹாஜீ மீரான் ஹரூன் தலைவர் உரை, கடந்த ஆண்டிற்கான வரவு-செலவு அறிக்கை மற்றும் கடந்த பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றை வசித்தார். அமைப்பின் அறங்காவலர்கள் பற்றிய விபரத்தை ஹாஜீ ஜலால் வாசித்தார். பின்னர் தேர்வுக் குழு உறுப்பினர் ஹாஜி எம்.எல்.மூசா நைனா, 2009-2010 ஆண்டிற்கான நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார்.
தலைவர் : டி.எஸ்.ஓ.மீரான் ஹரூன்; துணைத் தலைவர்கள் : ஏ.எஸ்.ஜமால், ஏ.ரஃபுதீன் மற்றும் பி.எம்.எஸ்.முஹ்சின்; செயலாளர் : எம்.எஸ்.அபுபக்கர்; இணைச் செயலாளர் : கே.ஏ.கே.சையது அகமது; பொருளாளர் : பி.எஸ்.ஏ.கபீர்; செயலாளர் எம்.எஸ்.அபுபக்கர், ஹஃபீஸ் வி.எம்.டி.முகம்மது ஹசன் ஆகியோர் நன்றியுரை வழங்கினர். சுமார் 200 உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்பன் மகர விளக்கு பஞ்ச கால மஹா பூஜை...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.